பிரிகிடாவின் இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி!

இன்னைக்கு டீச்சர்னு சொன்னதும் ‘பவி டீச்சர்’தான் சடனா நியாபகம் வருவாங்க. ‘ஆஹா கல்யாணம்’ சீரீஸ் வெளியான சமயத்துல எல்லார் ஸ்டேட்டஸ்லயும் இவங்கதான் இடம் பிடிச்சிருந்தாங்க.

பவி டீச்சர் ஆர்மி, பவி டீச்சர் டை ஹார்ட் ஃபேன்ஸ் அப்டினு ஏகப்பட்ட சோஷியல் மீடியா பக்கங்களை நம்ம பசங்க ஆக்கிரமிச்சு இருந்தாங்க. இன்னைக்கும் அவங்களோட உண்மையான பெயரை சொல்லி கூப்பிடுறதைவிட பவி டீச்சர்னு சொன்னாதான் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

பிரிகிடா 2000-லதான் பிறந்தாங்க. சென்னை பொண்ணுதான். பக்கா 2’கே கிட். சின்ன வயசுல சினிமாக்குள்ள வரணும், நடிக்கணும் அப்டிலாம் பெருசா ஆசை இல்லை. ஆனால், டான்ஸ் செமயா ஆடுவாங்க. நிறைய டிக்டாக் வீடியோஸ்லாம் பண்ணி போடுவாங்க. ஃபேமிலியாகூட டிக்டாக் பண்ணுவாங்க.

நல்லா பாட்டு பாடுவாங்க. அப்படியே ஸ்கூல் முடிச்சதும் லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்க ஜாய்ன் பண்ணாங்க. படிக்கும்போதே நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் நடிக்கத் தொடங்கிட்டாங்க. அப்போ அவங்களுகு சினிமா இண்டஸ்ட்ரீக்குள்ள வரணும்னு ஆசை. ஆனால், வீட்டுல “நீ படிச்சு முடிச்சு டிகிரி வாங்கிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு”னு சொல்லியிருக்காங்க.

நடிக்கும்போதே இயக்குநர் பாலாகூட வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவர் டைரக்ட் பண்ண வர்மா படத்துலயும் இவங்க நடிச்சிருக்காங்க. இதுதான் பிரிகிடாவோட ஃபஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ். அப்புறம் சரி, ஃபுல்லா படிப்புல ஃபோகஸ் பண்ணலாம்னு நினைச்சிருக்காங்க. படிக்கணும்ன்ற ஆசையால சினிமால வந்த நிறைய வாய்ப்புகளை தவிர்த்திருக்காங்க.

பவி டீச்சருக்கு படிக்கும்போது எடிட்டர் ஆகணும், டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. ஒருவேளை நடிப்புல அவங்க பிஸி ஆகலை அப்டினா டைரக்டர் இல்லைனா எடிட்டர்தான் ஆகியிருப்பாங்களாம். நிறைய கதைகள் எல்லாம் எழுதி வைச்சிருக்காங்களாம். டைரக்டரா பிரிகிடா வருவாங்களானு வெயிட் பண்ணிதான் பார்க்கணும்.

இவங்களுக்கு வெப் சீரீஸ்ல வாய்ப்பு கிடைச்சதே செம இன்ட்ரஸ்டிங்கான விஷயம். ஒருநாள் காலேஜ்ல ‘ஆஹா கல்யாணம்’ சீரீஸோட டைரக்டர் யுவராஜ், பிரிகிடாவைப் பார்த்துட்டு, பவி டீச்சர் கேரக்டரை சொல்லியிருக்காங்க. “நீங்க இந்த கேரக்டரை பண்ணா நல்லாருக்கும்”னு சொல்லியிருக்காங்க.

அவங்களுக்கும் இந்த கேரக்டர் புடிச்சுப்போக, வீட்டுல சொல்லி சமாதானப்படுத்தி நடிச்சிருக்காங்க. காலைல ஷூட்டிங், ஈவ்னிங் காலேஜ், சிலநாள் பங்க் பண்ணிட்டு ஷூட்டிங்னு காலேஜ் லைஃப ஓட்டியிருக்காங்க. ஆஹா கல்யாணம் கொடுத்த ரெஸ்பான்ஸ்னால அப்பவே அவங்க பெரிய செலிபிரிட்டி ஆயிட்டாங்க.

ஆஹா கல்யாணம் சீரீஸ்க்கு அப்புறம் சிலபல படங்கள்ல கமிட் ஆகி சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா மாஸ்டர் படத்துல அவங்க சின்ன கேரக்டர்ல வந்தாலும் ‘ஏய் பவி டீச்சர்’னு சில்லறைய சிதற விடுற அளவுக்கு ஃபேன்ஸ் ரெஸ்பான்ஸ் கொடுத்தாங்க. 'பவி டீச்சர்’ கேரக்டர் எந்த அளவுக்கு ரீச்னா, நம்ம தளபதி விஜய் பிரிகிடாவை, “சொல்லுங்க பவி டீச்சர்” அப்டினுதான் சொல்லுவாராம்.

இரவின் நிழல் படத்துல அஸிஸ்டண்ட் டைரக்டரா இருந்த பிரிகிடாகிட்ட ஒருநாள் பார்த்திபன் சிலக்கம்மா கேரக்டர் நீங்கதான் பண்றீங்கனு சொல்லியிருக்காரு. ஆனால், அந்த கேரக்டருக்கு நியூட் சீன் இருக்குனு சொல்லியிருக்காரு. பிரிகிடா தயங்கியிருக்காங்க. அப்புறம், அவங்கள கன்வைன்ஸ் பண்ணியிருக்காரு. பிரிகிடாவோட அம்மாப்பா கால்லயெல்லாம் விழுந்து அவங்களையும் கன்வைன்ஸ் பண்ணி பிரிகிடாவை இந்த கேரக்டர்குள்ள கொண்டு வந்துருக்காரு.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

“இந்த கேரக்டர் ரொம்பவே புனிதமானது. அந்த ஒரு சிச்சுவேஷன்ல அப்படி இருக்கும்போது அந்த இடத்துல அந்தப் பொண்ணை அப்படி பார்க்க முடியாது”னு பிரிகிடா சொல்லுவாங்க. பார்த்திபனும் அதையேதான் சொல்லுவாரு.

ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக், ஸ்ரேயா கோஷல் வாய்ஸ்ல, உலக அளவுல ஃபேமஸா எடுக்கப்படுற இந்தப் படத்துல நான் நடிக்கிறது ரொம்பவே பெருமையா இருக்குனு பிரிகிடா சொல்லியிருக்காங்க. வெறும் பேச்சோட இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை ரொம்பவே சிறப்பாவும் படத்துல பண்ணியிருக்காங்க.

சரி இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி... ஆஹா கல்யாணம் பவி டீச்சர்... இரவின் நிழல் சிலாக்கம்மா... எந்த பிரிகிடாவை உங்களுக்கு ரொம்பப் புடிக்கும்... ஏன்?  கமெண்ட்ல சொல்லுங்க!