அறிவு எனும் சமூகப் பாடகன்!

பாடகர் அறிவு, அரக்கோணத்தைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் முடிச்சு எம்.பி.ஏவும் படிச்சு முடிச்சிருக்கார்.

சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பது, கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவர், கல்லூரி காலத்தில் `குனிந்து வரவேற்கும் குடிசைகள்’ங்குற தலைப்புல ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார்.

காலேஜ் படிக்கும்போது அங்க இருந்த ஒரு மியூசிக் பேண்ட்ல அறிவு இருந்துருக்காரு. அப்போதான் பாட்டு எழுதுற ஆர்வமும் அறிவுக்கு வந்துருக்கு. பேண்ட்ல ராப் பாடல்களை பாட ஆரம்பிச்சிருக்காரு.

கல்லூரி இறுதியாண்டில் அட்டக்கத்தி படம் பார்த்த அறிவு, பா.இரஞ்சித்தை ரொம்பவே பிடித்திருக்கிறது. அதன்பிறகு அவரைப் பின்பற்றி தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

வேலூர் வந்த பா.இரஞ்சித்தை, நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த உதயா என்பவர் மூலம் முதல்முறையாக நேரடியாகச் சந்தித்திருக்கிறார்.

ஒரு மாதம் கழித்து காஸ்ட்லெஸ் கலெக்‌ஷன்ஸ் ஆடிஷனுக்காகப் போன அறிவு,   எழுதிய ’ஆண்ட்ராய்ட் யுகத்து அம்பேத்கர் பேரர்கள்’ கவிதை அடையாளம் காட்டியிருக்கிறது.

காஸ்ட்லஸ் கலெக்டிவ்ல கிட்டத்தட்ட 10 பாட்டு எழுதியிருக்காரு. பின்னர், காலா படத்துல நிலத்தைப் பத்தி பாட்டு எழுத பா.இரஞ்சித் அறிவை கூப்பிட்ருக்காரு. கிட்டத்தட்ட 10 நாள் உட்கார்ந்து யோசிச்சு அந்தப் பாட்டை அறிவு எழுதுனாராம்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

‘எஞ்சாய் எஞ்சாமி’ அறிவோட கரியர்ல ரொம்பவே முக்கியமான ஒரு பாட்டு இதுதான். நம்ம முன்னோர்களோட கஷ்டங்களையும் நிலத்தையும் பத்தி இந்தப் பாடல்கள்ல அறிவு சொல்லியிருப்பாரு.

அறிவோட முக்கியமான எய்ம்ல ஒண்ணு ரொம்ப ஸ்வீட்டா அம்பேத்கரை இன்னைக்கு இருக்குற குழந்தைங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கணும்ன்றதுதான்.