ஐ.பி.எல் வரலாற்றில்... ஆர்.சி.பி செய்த தரமான 7 சாதனைகள்!

ஆர்.சி.பி கப் ஜெயிக்கலைனாலும் அவங்க பண்ண சில சாதனைகளை மத்த டீமால நெருங்கக்கூட முடியலை. அவ்வகையில் சில சாதனைகள் இங்கே...

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரைக்கும் அதிக ரன்கள் அடித்த அணி ஆர்.சி.பி. 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக செஞ்சுரி அடித்த அணி, ஆர்.சி.பிதான். இதுவரைக்கும் 14 செஞ்சுரிக்களை ஆர்.சி.பி அணி வீரர்கள் அடித்துள்ளனர்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட அணியும், ஆர்.சி.பிதான். இதுவரைக்கும் 1100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

 ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை 200+ ரன்களை அடித்த அணியும், ஆர்.சி.பிதான். 

ஐ.பி.எல் வரலாற்றில் 200+ ரன்களுக்கு இரண்டு வீரர்கள் பார்னர்ஷிப் போட்டு பட்டையைக் கிளப்பிய அணியும், ஆர்.சி.பிதான். 

ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதம் எடுத்த வீரர் ஆர்.சி.பி அணியைச் சேர்ந்த, கிறிஸ் கெய்ல்தான்.

எவ்வளவு உயர்ந்த சாதனைகள் இருந்தாலும்... சில மோசமான சாதனைகளும் இருக்கத்தான செய்யும். அவ்வகையில் ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்த அணியும் ஆர்.சி.பிதான். கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களை மட்டுமே 2017-ல் எடுத்தது.

ஆர்.சி.பி-யின் இன்னிங்க்ஸ்களில் உங்களுக்கு மறக்க முடியாத இன்னிங்க்ஸ் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!