`நீதிமன்றம் தரப்போறது தீர்ப்பு இல்லை, நம்பிக்கை!’ - `ஜெய் பீம்’ சூர்யாவின் 15 பவர்ஃபுல் வசனங்கள்!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படம், `ஜெய் பீம்’. ஆஸ்கர் வரைக்கும் சென்று இந்தியாவுக்கு இன்று பெருமை சேர்த்துள்ளது. அந்தப் படத்தில் சூர்யா பேசிய பவர்ஃபுல்லான 15 வசனங்கள் இங்கே...

jai bhim

“”

பிரச்னையை தீர்க்கத்தான போராட்டம். வளர்க்க இல்லையே!

jai bhim

“”

பாதிக்கப்பட்டவங்க யாரா இருந்தாலும், எத்தனைப் பேரா இருந்தாலும் அவங்களுக்கு நீதி கிடைக்கணும். அதை உறுதி செய்றது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை!

jai bhim

“”

காந்தி, நேருனு எல்லா முக்கியமான தலைவர்களும் இருக்காங்க. ஏன், அம்பேத்கர் மட்டும் இல்லை?

jai bhim

“”

யார் மேலயும் வெறுப்புலாம் இல்லை சார். சமூகத்து மேல அன்பும் அக்கறையும் இருக்கு.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

jai bhim

“”

எந்த ஆதாரமும் இல்லாமல் நாம கேஸ் போடுறது வெறும் மூணு போலீஸ எதிர்த்து இல்லை. ஒட்டுமொத்த அதிகாரத்தை எதிர்த்து. இந்த அரசாங்கத்தை எதிர்த்து. சவாலான போராட்டமா இருக்கும். தயாரா இருங்க.

jai bhim

“”

யார் கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் உண்மையை மட்டும்தான் சொல்லணும். அதுதாம் நம்மள காப்பாத்தும்.

jai bhim

“”

பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

jai bhim

“”

ஒருத்தர்கிட்ட இருக்குற திறமை எதுக்கு உதவுதோ அதை வைச்சுதான் அதுக்கு மரியாதை. உன்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைச்சுதுனா அன்னைக்கு நிம்மதியா தூங்குவேன். அதுதான் எனக்கு ஃபீஸ்.

jai bhim

“”

ஒரு உண்மையை சொல்றாங்கனா, பல உண்மைகளை மறைக்கிறாங்கனு அர்த்தம்.

jai bhim

“”

இந்த கேஸ் ஃபைல நல்லா படிங்க. நீங்க சொன்ன ரௌடியைவிட போலீஸ்காரங்க எவ்வளவு மோசமா நடந்துக்கிட்டாங்கனு தெரியும். உங்க ஜனநாயகத்தை எப்படி நிலைநிறுத்தப் போறீங்கனு நானும் பார்க்க ஆர்வமா இருக்கேன்.

jai bhim

“”

திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா நட்ராஜ்? உங்க ஜாதி, என் ஜாதினு எல்லா ஜாதிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க. மொதல்ல ஒரு ஜாதி பேரை சொல்லி இவங்க இப்படிதன்னு பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க.

jai bhim

“”

நான் எதையும் சாதிக்கிறதுக்காக இந்த கேஸ் எடுக்கல. ஒரு இன்னசெண்ட் ட்ரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கனும்னு போராடுறேன். இன்னைக்கு செங்கேணி நாளைக்கு இன்னொரு பொன்னுக்காக நிப்பேன். கோர்ட்ல நீதி கிடைக்கலைனா, ரோட்ல இறங்கி போராடுவேன். போராடுறதுக்கு `லா’ எனக்கொரு வெப்பன். தட்ஸ் ஆல். 

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

jai bhim

“”

தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், ஜாதினு நிறைய இருக்கு. பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதான இருக்கோம். நாமளும் எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போலாம்.

jai bhim

“”

இது வெறும் லாக்கப் மரணத்துக்காகப் போடப்பட்ட சாதாரண வழக்கு கிடையாது. அதிகார திமிர்ல எங்கள போட்டு அடிச்சுக் கொன்னாலும் ஏன்னு கேட்க நீங்க யாருமே வரமாட்டீங்களானு ஒரு பழங்குடியினப் பெண் நம்மள உலுக்கிக் கேட்குற கேள்விதான் இந்த ஹேர்பியஸ் கார்ப்பஸ் பெட்டிஷன்.

jai bhim

“”

நீதிமன்றம் தரப்போறது தீர்ப்பு இல்லை, நம்பிக்கை.

`ஜெய் பீம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!