தியாகபூமி முதல் அலை ஓசை வரை... படத்தின் டைட்டிலான கல்யின் புத்தக டைட்டில்கள்!

 தியாகபூமி

கல்கியின் தியாகபூமி கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. 1939-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.

கள்வனின் காதலி

கல்கியின் கள்வனின் காதலி கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் 1955-ம் ஆண்டு வெளியானது.

பார்த்திபன் கனவு

கல்கியின் புத்தகத்தின் தலைப்பு மட்டுமே இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். சினேகா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் இந்தத் திரைப்படம் 2003-ம் ஆண்டு வெளியானது.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் தயாராகிக்கொண்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, எம்.ஜி.ஆர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

அலை ஓசை

விஜயகாந்த் நடிப்பில் 1985-ம் ஆண்டு வெளியான திரைப்படம், அலை ஓசை.