கமல் - கிரேஸி மோகன் காம்போவில் உருவான யோசிக்க வைக்கும் 10 பன்ச்கள்!

படம் : மைக்கேல் மதன காமராஜன்

குஷ்பு : You Naughty கமல் : ஐ.. நீ மட்டும் 'கம்மி'Naughtyயா?

படம் : பம்மல் கே சம்பந்தம்

கமல் : மெய்யாலுமே சாவடிச்சிட்டாங்களா டா? வையாபுரி : சாவடிக்கல ணே. சாவடி அடிச்சிட்டாங்க

படம் : அபூர்வ சகோதரர்கள்

நாகேஷ் : என்ன யா பாதிதான் கொண்டு வந்துருக்க பாக்கி 3 அடி எங்க? அடியாள் : இவ்ளோதான் யா கிடைச்சது

படம் : பஞ்சதந்திரம்

கமல் : நீ போய் தொலையேன்! சிம்ரன் : போய் தொலையா? கமல் : இல்ல... இல்ல... தொலைவா போங்கிறதை டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன்.

படம் : அவ்வை சண்முகி

கமல் : பயங்கர ஷாக் முதலியார் ஹீரா : What??? கமல் : ஒரு 440 Watt இருக்கும்

படம் : மைக்கேல் மதன காமராஜன்

குஷ்பு : மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார்

படம் : காதலா காதலா 

கமல் : ஷாஜகான் அவரோட மனைவிக்கு தாஜ் மஹால் கட்டின மாதிரி என் மனைவிக்கு 100 மஹால் கட்டணும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஒரு வீடுதான் கட்டினேன் அதுக்கே நூர் மஹால்னு பேரு வெச்சிட்டேன்.

படம் : அவ்வை சண்முகி

கமல் : நான் மானகி ஜம்பா வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன் நாகேஷ் : என்ன யா சொல்ற? கமல் : சாரி, ஜானகி அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்

படம் : பம்மல் கே சம்பந்தம்

சினேகா : கிளியாட்டம் நான் இங்க இருக்கும்போது குரங்காட்டம் ஒரு கீப் தேவையா? சிம்ரன் : நீயே ஏன் கீப்னு சொல்ற? சினேகா : ஆமா ஆனந்துக்கு Leftல போறாளே. நம்ம ஊர்ல கீப் லெஃப்ட்தானே

படம் : வசூல் ராஜா

கமல் : உள் காயம்னு சொன்னதால உள்ள ட்ரீட் பண்றோம். வெளிக்காயம்ன்னா வெளில பண்ணிருப்போம் பிரபு : பெருங்காயமா இருந்தா? கமல் : சாம்பார்ல போட்ருப்போம்

கமல் படங்கள் பேசிய உண்மை சம்பவங்கள், பிரச்னைகள்!