காமராஜர் வாழ்வின் 4 முக்கிய தருணங்கள்!

லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக முன்னிறுத்திய போது காமராஜரிடம், ``நீங்கள் ஏன் பிரதமராகக் கூடாது?’’ என  கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில், இந்தி கிடையாது. ஆங்கிலமும் கிடையாது. நான் எப்படி பிரதமராவது?’’ என்று அடக்கத்தோடு சொன்னார்.

பயணத்தின்போது சிறுவன் ஒருவனிடம் `பள்ளிக்கு செல்லவில்லையா?’ என கேட்டதற்கு,சாப்பாடு தருவீங்களா?’ என பதில் கேள்வி கேட்டிருக்கிறான் அந்த சிறுவன்.

இதன்பின்னர் தான் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இவர் கொண்டுவந்த திட்டம்தான் கே – பிளான் (K – Plan). 

அதற்கும் முன்மாதிரியாக 1963-ல் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி சென்றார்.

காமராஜர், தனது உதவியாளர் வைரவனிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் – `விளக்கை அணைத்து விட்டுப் போ’ என்பதுதான்.