கண்ணதாசனின் கற்பனைத் திறனைக் காட்டும் 13 வரிகள்!

செந்தமிழ் தேன்மொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்..

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா.. கலை எல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்.. பருவச் சிலைகளின் அரங்கம்.. காலமே ஓடிவா.. காதலே தேடிவா..

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே.. விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே..

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா..

அமைதியான நதியினிலே ஓடும்.. ஓடம்.. அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..

சட்டி சுட்டதடா கைவிட்டதடா.. புத்தி கெட்டதடா.. நெஞ்சைத் தொட்டதடா..

போனால் போகட்டும் போடா.. இந்த.. பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக.. மலர்கள் மலர்வது எனக்காக..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. ஒரு கோல மயில் என் துணையிருப்பு..