கோலிவுட் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்கனு தெரியுமா?!

தமிழ் சினிமால முன்னணி நடிகையா இருக்குறவங்கள பல பேர் படிச்சவங்கதான். “நடிப்புனு வந்தாலும் படிப்பும் முக்கியம்தான்”னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு. சரி... எந்தெந்த நடிகைகள் என்னென்ன டிகிரிலாம் வாங்கியிருக்காங்க?

நயன்தாரா

Arrow

'மாயா, காதம்பரி, மதிவதனி, கோகிலா’னு செமயான பல கேரக்டர்கள்ல இறங்கி கலக்கி இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா வளர்ந்து நிக்கிற நம்ம ‘கண்மணி’ கேரளாவின் திருவல்லாவில் உள்ள மர்தோமா காலேஜ்ல பி.ஏ இங்கிலீஷ் படிச்சிருக்காங்க.

த்ரிஷா

Arrow

வுமன் சென்ட்ரிக் படங்கள் வொர்க் அவுட் ஆகலைனாலும், திரிஷா என்னைக்கும் கெத்துதான். அதுவும் தனலட்சுமி, அபி, ஜெஸ்ஸி, ஜானு, ஹேமானிகா கேரக்டர்லாம் திரிஷாவைத் தவிர வேற யார் பண்ணாலும் இவ்ளோ நல்லா வந்துருக்காதுனே சொல்லலாம்.

ரஜினில இருந்து விஜய் சேதுபதி வரை எல்லார்கூடயும் நடிச்சிட்டாங்க. இவங்க சென்னைல இருக்குற எத்திராஜ் காலேஜ்ல பி.பி.ஏ படிச்சிருக்காங்க. `விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக்குக்கு, படத்தின் பிசினஸ்ல எதாவது டவுட்னா ஜெஸ்ஸிகிட்ட கால் பண்ணி கேட்டுக்கலாம்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

சமந்தா

Arrow

அழகென்ற சொல்லுக்கு 'சமந்தா’. கதீஜா கேரக்டர் பார்த்ததுக்கு அப்புறம் இப்படிதான் சொல்ல வேண்டியதா இருக்கு. வேம்பு, தாரா, சத்யா, நித்யா வாசுதேவன், மித்ரானு சமந்தா பண்ண எல்லா கேரக்டர்களும் அவ்வளவு கியூட்டா இருக்கும்.

அனுஷ்கா

Arrow

சினிமா இண்டஸ்ட்ரீக்குள்ளயே அனுஷ்காவுக்கு நிறைய ஸ்டார்ஸ் ஃபேனா இருக்காங்க. பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, என்னை அறிந்தால் அப்படினு அவங்க பண்ண கேரக்டர்ஸ் எல்லாமே ரொம்ப முக்கியமானது. குறிப்பா இஞ்சி இடுப்பழகி பேசின விஷயம் ரொம்ப அழகானது. பெங்களூர்ல இருக்குற மவுண்ட் கார்மல் காலேஜ்ல பி.சி.ஏ படிச்சிருக்காங்க அனுஷ்கா.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

சாய் பல்லவி

Arrow

மலர் டீச்சர்னா யாருக்குதான் புடிக்காது? இப்படி ஒரு டீச்சர் நமக்கு வரமாட்டாங்களானு ஏங்க வைச்ச சாய் பல்லவி நிஜத்துல டீச்சர் இல்லை டாக்டர். ஜார்ஜியால போய் எம்.பி.பி.எஸ் படிச்சிருக்காங்க. எக்ஸ்கியூஸ்மி அவங்க ஹாஸ்பிடல் எங்க இருக்குனு அவங்களையே சோஷியல் மீடியால டேக் பண்ணி கேளுங்க.

ராஷ்மிகா

Arrow

தளபதி 66ல பிஸியா நடிச்சிட்டு இருக்காங்க. நேஷனல் க்ரஷ்னு இவங்களை அனௌன்ஸ் பண்ணிட்டாங்க. எம்.எஸ் ராமையா காலேஜ்ல இங்கிலீஷ், ஜார்னலிஸம், சைக்காலஜினு மூணுமே படிச்சிருக்காங்க. வேறலெவல்!

கீர்த்தி சுரேஷ்

Arrow

மகாநடி படத்துல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைச்சிட்டாங்க. கீர்த்தி ஃபேஷன் டிசைனிங் முடிச்சிருக்காங்க. இதனாலயே, ஷூட்டிங்லலாம் ஒரு சின்ன மிஸ்டேக் பேஷன் டிசைனிங்ல நடந்தாலும் ஈஸியா கண்டுபிடிச்சு தூக்கிருவாங்களாம்.

பிரியங்கா மோகன்

Arrow

பசங்க மத்தியில மெழுகு சிலையா வலம் வர்றது பிரியங்கா மோகன்தான். இவங்க என்ன படிச்சிருக்காங்கனு சொன்னா, நம்ம பசங்க எல்லாருக்குமே பிடிச்சிடும். ஆமா, நம்மள்ல பலர் மாதிரி இவங்களும் என்ஜினீயரிங் ஸ்டுடண்ட்தான்.

பிரியா பவானி ஷங்கர்

Arrow

பிரியா பவானி ஷங்கரும் ஒரு என்ஜினீயரிங் ஸ்டூடண்ட்தான். பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸண்ட் என்ஜினீயரிங் காலேஜ்லதான் படிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் எம்.பி.ஏ-வும் முடிச்சிருக்காங்க.

பூஜா ஹெக்டே

Arrow

மாஸ்டர் படத்துல நடிச்சு அரபிக் குத்து பாட்டுக்கு நம்மள செமயா ஆட்டம் போட வைச்சிட்டாங்க. உலக அளவுல இந்தப் பாட்டு செம ஹிட். பூஜா ஹெக்டே மும்பையில் உள்ள எம்.எம்.கே காலேஜ்ல எம்.காம் முடிச்சிருக்காங்க.