நம்ம கோலிவுட் ஸ்டார்ஸின் செல்லப் பெயர்கள் என்னென்னு தெரிஞ்சுக்கலாமா?

ஆர்யா

ஆர்யாவுக்கு ரொம்பப் பிடித்த செல்லப்பேர் ஜம்ஷத்.

மாதவன்

சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனை ரசிகர்கள் மேடி என்கிற செல்லப்பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஷாந்தனு

நடிகர் ஷாந்தனுவுக்கு அவரின் ஆன் ஸ்கிரீன் பேரான செங்குட்டுவன் ரொம்பவே ஃபேவரைட்டாம்.

அருண் விஜய்

ரீ-எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய என்னை அறிந்தால் விக்டர் பேர்தான் அருண் விஜய்க்கு ரொம்பப் பிடிக்குமாம்.

பிரேம்ஜி அமரன்

நடிகராகவும் இசையமைப்பாளராவும் இருக்கும் பிரேம்ஜி செலெக்ட் செய்த பெயர் `இசை சுனாமி’

கார்த்தி

விரைவில் ரிலீஸாக இருக்கும் ஜப்பான் படத்தின் லீட் கேரக்டர் நேமான ஜப்பான் என்கிற பெயர்தான் கார்த்தி செலெக்ட் செய்தது.

ஜீவா

நடிகர் ஜீவாவுக்குத் தனது ஒரிஜினல் பெயரான அமர் ரொம்பவே பிடிக்குமாம்.

சந்தானம்

காமெடி டூ ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம், தன்னை சாண்டா என்று சுருக்கி அழைப்பது பிடிக்கும் என்றிருக்கிறார்.

கலையரசன்

நடிகர் கலையரசனின் பேவரைட் மெட்ராஸ் படத்தில் அவர் நடித்திருந்த அன்பு என்கிற கேரக்டர் பெயர்தானாம்.

வெங்கட் பிரபு

நடிகராக இருந்து இப்போ டைரக்டரா கலக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு, தன்னை சிம்பிளா பிரபுனு கூப்பிடுறது நல்லா இருக்கும் என்கிறார்.