`காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு, கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்’ - கே.ஜி.எஃப் படத்தின் 10 மாஸ் வசனங்கள்!
இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், கே.ஜி.எஃப். அந்தப் படத்தின் ஒவ்வொரு வசனமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அப்படத்தில் இடம்பெற்ற மாஸ் வசனங்கள் இங்கே...
“
வாழ்க்கைனா பயம் இருக்கணும். அது நெஞ்சுக்குள்ள மட்டுதாம் இருக்கணும். ஆனால், அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்கக்கூடாது. நம்மள எதிர்த்து நிக்கிறவங்களோடதா இருக்கணும்.
யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா நான். நான் அடிச்ச பத்து பேரும் டானுங்கதான்.
“
யாரை அடிக்கிறதுக்காக என்னை கூப்பிட்டீங்களோ... அவனை அடிக்காம திரும்பி போக மாட்டேன். அந்த இடம் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் அங்கயே போய் அவனை தூக்குவேன்.
“
அவசரப்பட்டு சரித்திரத்தை உருவாக்க முடியாது. அதுக்கொரு தீப்பொறி வேணும். ஆனால், இப்போ காட்டுத்தீயே பத்திக்கிச்சு.