`kill them with your success and bury them with your smile' - தளபதி விஜய்யின் டாப் 10 ரியல் லைஃப் அட்வைஸ்!
தமிழ் சினிமாவின் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து முன்னணி நடிகராக இருப்பவர், விஜய். அவர் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அட்வைஸ் செய்வது வழக்கம். அவ்வகையில், அவர் செய்த சில `நச்’ அட்வைஸ்கள் இங்கே...
தோல்விகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாங்க. ஆனால், வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் மட்டுமே காரணம்.
லைஃப்ல முன்னுக்குவர நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், என்ன... அந்த வாய்ப்புல இருக்குற கஷ்டத்தைப் பார்க்குறவங்க தோக்குறாங்க. கஷ்டத்துலயும் இருக்குற வாய்ப்பைப் பார்க்குறவங்க ஜெயிக்கிறாங்க.