`Parallel Space முதல் Super Clone வரை’ - மொபைலில் மல்டிபிள் அக்கௌண்டுகளை பயன்படுத்த தேவையான ஆப்ஸ் லிஸ்ட்!

லேப்டாப் அல்லது பி.சி-ல எளிதாக இன்னொரு ப்ரௌசரை ஓப்பன் பண்ணி நம்மளோட இன்னொரு ஜி மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற அக்கவுண்ட்களை லாக் இன் செய்துகொள்ள முடியும். ஆனால், நம்மளோட மொபைல்ல அது ரொம்பவே கஷ்டம். அதுக்காக சில ஆப்கள் இருக்கு. அது என்னலாம்னு இங்கே பார்க்கலாம்.

Parallel Space - ரொம்பவே பிரபலமான ஆப் இது. சோஷியல் மீடியா மற்றும் கேமிங் அக்கௌண்டுகளை இதில் லாக் இன் செய்து கொள்ளலாம்.

2 Accounts - இன்ஸ்டா மெசேஜிங், கேமிங் ஆப் மற்றும் பிற சோஷியல் மீடியா அக்கௌண்டுகளை இதில் லாக் இன் செய்துகொள்ளலாம்.

Dual Space - ரொம்பவே சிம்பிளான ஈஸியான ஆப் இது. நாம யூஸ் பண்ற ஒரிஜினல் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களை அப்படியே இந்த ஆப்பிலும் பயன்படுத்தலாம்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

App Cloner - ஒன்றுக்கும் மேற்பட்ட சோஷியல் மீடியா ஐடிக்களை இதில் லாக் இன் செய்துகொள்ள முடியும்.

2Face - இந்த ஆப்போட ஸ்பெஷாலிட்டி என்னனா இதுல விளம்பரங்கள் அதிகளவில் வராது. பயன்படுத்த ரொம்பவே எளிதான ஆப் இது.

Super Clone - ஒரிஜினல் ஆப்களுக்கு இணையான தரம் இந்த ஆப்பில் உண்டு. இதிலும் சோஷியல் மீடியா உள்ளிட்ட பல ஐடிக்களை லாக் இன் செய்துகொள்ள முடியும்.

2 Lines for Whazzap - வாட்ஸ் அப்பிற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆப் இது.

இந்த ஆப்களில் எந்த ஆப்பை நீங்க பயன்படுத்தலாம்னு நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!