வித்தியாசமான விளம்பர முயற்சிகள்!

1994-ல் லண்டனில் Red Bull energy drink-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டபோது, பெரிய மார்கெட்டிங் ஏஜென்சிகள் எல்லாம் நாளிதழ் விளம்பரங்கள், சுவற்றில் விளம்பர பலகைகள் வைக்கலாம் எனப் பலரும் ஐடியாக்கள் சொல்ல. நிறுவனமோ வேறு ஒரு பிளானுக்காகத் தெருத் தெருவாக குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்தது.

லண்டனில் பிரபலமான உணவகங்கள், பார்கள் இருந்த தெருக்களில் அமைந்துள்ள குப்பைத் தொட்டிகளில் நள்ளிரவில் Red bull நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே காலியான கேன்களைக் கொட்டியிருக்கிறார்கள். காலையில் அந்தத் தெரு வழியாகச் செல்பவர்கள். "ஓ, இந்த red bull-ஐ நிறையப் பேர் குடிக்குறாங்கப் போலவே, நாமளும் குடிச்சுப் பார்ப்போம்"னு வாங்க ஆரம்பிக்கவே, red bull லண்டனில் பிரபலமானது.

மார்க்கெட்டிங் உத்திகளில் Product Placement என ஒரு விஷயம் உண்டு. பல ஹாலிவுட் சினிமாக்களில், சில நொடிகள் முதல் நிமிடங்கள் வரை பிரபலமான பல பிராண்டுகளை போகிற போக்கில் காட்டுவார்கள்.

சந்திரமுகி படத்தில் ரஜினி மாட்டு வண்டியில் வரும் போது பின்னால் விளம்பர பேனர்களில் கங்குலி டாட்டா டொக்கோமோ விளம்பரத்தில் சிரித்துக்கொண்டிருப்பார்.

யூ-டியூப் போய் "why this kolaveridi?" பாட்டோட வீடியோவைப் பாருங்க. அந்தப் பாட்டில் எத்தனை பிராண்டுகள் உங்க கண்களுக்குத் தெரியுதுன்னு எண்ணி கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் Bond girl யார் என்ற அறிவிப்புக்கு ஒரு கூட்டம் காத்துக்கிடந்தால், பான்ட் சில்லு சில்லாக நொறுக்கப்போகும் கார் எது என்பதைப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். அமெரிக்கர்கள் பயன்படுத்தும் பல பொருள்கள் இப்படி Product placement ஆக பல படங்களில் இடம்பெறும்.

ஐ-போன் மட்டும் இந்த product placement-களில் ஒரு வித்தியாசமான நடைமுறையை எழுதப்படாத கட்டளையாக வைத்திருக்கிறார்கள்.  நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்கள் கட்டாயமாக ஐ-போன் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

2019-ம் ஆண்டு Golden Globe Award விழாவில் Fiji Water இது போன்ற Product placement ஒப்பந்தத்தில் இருந்தது. ஊதா நிற உடையில் தேவதையாக வலம் வந்த Kelleth Cuthbert, ஹாலிவுட் நடிகர்களை விட அதிக கவனத்தை ஈர்த்தார்.

இதனால்,  #FijiGirl என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது. Kelleth Cuthbert-ம் ஓவர் நைட்டில் லைம் லைட்டுக்கு வந்தார். Fiji Water நிறுவனத்துக்கும் இது மிகப்பெரிய இமேஜைக் கொடுத்தது.