அண்ணாமலை முதல் சிவகாமி வரை... அரசியல் பாதையைத் தேர்வு செய்த அதிகாரிகள்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பொறுப்புகளில் சிறந்து விளங்கிய பல அதிகாரிகள் அரசியலில் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். அவ்வகையில், அதிகாரிகளாக இருந்து அரசியலில் குதித்த 10 பேர் பட்டியல் இங்கே...

அண்ணாமலை - கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கிய இவர் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்தார். தற்போது அக்கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளார்.

சந்தோஷ் பாபு - தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய இவர் பணி ஓய்வு பெற எட்டு ஆண்டுகள் இருந்தபோது மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ஆர். ரங்கராஜன் - 2005-ம் ஆண்டு தனது ஐ.ஏ.எஸ் பதவியில் இணைந்த இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சந்திரலேகா - ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகித்தார். சென்னை மேயர் தேர்தலில் ஸ்டாலினிடம் தோற்றார்.

மவுரியா - ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆர். நட்ராஜ் - ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் அ.தி.மு.க-வில் சேர்ந்தார். 2016 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சிவகாமி - ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் விருப்ப ஓய்வு வாங்கி 2009 முதல் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட தொடங்கினார். சமூக சமத்துவப்படை என்ற கட்சியையும் தொடங்கி நடத்துகிறார். தற்போது அ.தி.மு.க ஆதரவோடு வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அலெக்சாண்டர் - தமிழக காவல்துறையில் பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை வகித்த இவர் 2014-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சேர்ந்தார். பின்னர், அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

மணிசங்கர் ஐயர் - பிரதமரின் இணைச்செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட பல பெரிய பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸில் இணைந்த இவர் ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மலைச்சாமி - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், அ.தி.மு.க-வில் சேர்ந்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் எம்.பி ஆனார். பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

இந்த லிஸ்டில் நாங்க மிஸ் பண்ண மற்றும் உங்களுக்குத் தெரிந்து அதிகாரியாக இருந்து அரசியலில் குதித்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!