ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகுபலி வரை... `அடிமை’ முறையைக்  காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

ஆயிரத்தில் ஒருவன் (1965) - `நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்!’ - இந்தப் படத்தோட வசனம்தான். கடற்கொள்ளையர்களாக இருக்கும் அடிமைகளை விடுவிக்க ஹீரோவின் போராட்டாமெ இந்தப் படத்தின் கதை. 

 இரணியன் - முரளி நடித்திருந்த இந்தப் படம் நிலபிரபுத்துவத்துக்கு எதிராகப் பேசியது.

பெரியண்ணா - கல்குவாரியில் அடிமையாக இருக்கும் தொழிலாளர்களை மீட்பதுதான் படத்தின் கரு.

பரதேசி - டீ எஸ்டேட்டுக்கு அடிமைகளாக வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்தது இந்தப் படம்.

கே.ஜி.எஃப் - கமர்ஷியல் படம் என்றாலும் சுரங்கத்தில் அடிமைகளாக இருக்கும் மக்களின் வாழ்வு, அவர்கள் படும் இன்னல்கள் பற்றி பேசியது இந்தப் படம்.

வாகை சூடவா - செங்கல் சூளையில் அடிமைகளாக இருக்கும் மக்களின் வாழ்வை இந்தத் திரைப்படம் பதிவு செய்தது. 

மதராசப்பட்டினம் - பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டிருந்தது.

பாகுபலி - கட்டப்பா உள்ளிட்ட கேரக்டர்கள் இந்த திரைப்படத்தில் ராஜ வம்சத்துக்கு அடிமைகளாக காட்டப்பட்டிருப்பார்கள்.

23-ம் புலிகேசி - தங்கம் தோண்டுவதற்காக மக்கள் அடிமைகளாக்கப்பட்டதைப் பற்றியும், அக்கால அரசியல் சூழலையும் நக்கலாக இந்தப் படம் பதிவு செய்திருந்தது.

வழக்கு எண் 18/9 - குழந்தைத் தொழிலாளர்கள் அடிமை முறை உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.