பிரிட்டீஷ் அரச குடும்பத்தின் வித்தியாச ரூல்ஸ்!

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் கருப்பு உடை அணியக்கூடாது. ஆனால் அவர்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்போது கட்டாயம் அவர்களுடன் ஒரு கருப்பு உடை எடுத்துச் செல்வது வழக்கம். காரணம் அரச குடும்பத்தில் யாராவது இறந்தால் மொத்த குடும்பமும் கருப்பு உடையில்தான் இருக்க வேண்டும்.

சாப்பாடு விஷயத்தில் ராணியின் தேர்வுதான் எல்லாமே. ராணிக்கு உருளைக்கிழங்கு, பாஸ்தா போன்ற பொருட்கள் பிடிக்காது. பூண்டு சுத்தமாக ஆகாது. அதே போல் ராணி சாப்பிட்டு முடித்துவிட்டால் உடன் அமர்ந்து சாப்பிடுபவர்களும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அரச குடும்ப வாரிசுகள் ரெண்டு பேரு ஒரே விமானத்துல பயணம் செய்யக்கூடாது. அதாவது அப்பா பையனா இருந்தாக்கூட எங்கயாவது போறதுனா தனித்தனி ஃப்ளைட்லதான் போகணும்.

பிரிட்டிஷ் மன்னர் வகையறாவா இருந்தாலும் பிரிட்டிஷ் கவர்மெண்ட் பத்தி எங்கயும் பேசக்கூடாது. ஓட்டுப் போடவும் கூடாது. ஆட்டோகிராஃப் போடவோ, செல்ஃபி எடுக்கவோ கூடவே கூடாது.

மகாராணி நின்று கொண்டிருக்கும்போது அவருக்கு முன்பு யாரும் உட்காரக்கூடாது. அதேபோல ஒருவர் எப்போ பேசணும் பேசக்கூடாதுனும் ராணிதான் முடிவு பண்ணுவாங்க.

அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிறையவே கட்டுபாடுகள். அடிக்கிற கலரில் நெயில்பாலிஷ் போடக்கூடாது, அதிகமாக மேக்கப் போடக்கூடாது, கண்மை, லிப்ஸ்டிக் அளவாக இருக்கவேண்டும்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தொப்பி அணிய வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் கிரீடம் அணிந்துதான் அரண்மனைக்குள் சுற்றவேண்டும்.

ராணிக்கு டிரைவிங் லைசன்ஸ் கிடையாது. ஆனால் அவர் எங்கு வேண்டுமானாலும் கார் ஓட்டலாம். அவருடைய காருக்கு நம்பர் பிளேட்டும் இருக்காது. அதே போல் அவருக்கு பாஸ்போர்ட்டும் கிடையாது. எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகலாம். அரச குடும்பத்தில் மற்றவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கிறது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ராயல் ஃபேமிலியைச் சேர்ந்தவர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த  சோசியல் மீடியாவிலும் இருக்கக்கூடாது.

யார் என்ன கிஃப்ட் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ளவேண்டும்.