லோகி முதல் எபிஸோட் எப்படி இருக்கிறது?
“
மார்வெல் வெறியர்களுக்கு Loki மேல் கோபம் வந்திருக்கும்... பரிதாபம் வந்திருக்கும்... மிரட்டிட்டான்யா நம்மாளு... லோகியா கொக்கா என ஆர்ப்பரித்திருப்பார்கள். அத்தனையும் கலந்துகட்டிய 'அடாவடிகளின் கடவுள், லோகி'
அப்படிப்பட்ட லோகி இப்போது Diney Hotstar original Series ஆக புதிதாக வந்திருக்கிறார். முதல் எபிஸோட் எப்படி இருக்கிறது? ஏற்கனவே Trailers மற்றும் Sneak Peak-லேயே, லோகியின் கதை எப்படி இருக்கும், எங்கிருந்து ஆரம்பிக்கிறது என தெரிந்திருக்கும்.
LOKI
LOKI
மாயவித்தைகள் காட்டும் லோகிக்கே மாயாஜால விளையாட்டுகளைக் காட்டும் TVA (Time Variance Authority) அமைப்பு என்றால் என்ன?
நேர்க்கோட்டில் சொல்லும் காலத்தில் லோகியைப் போலவோ, அச்சுபிச்சு டைம் டிராவலர்களோ குழப்புவதால் ஒரு புதுவகையான ரியாலிட்டி உருவாகி விடும். இது போல பல டைம்லைன்கள் உருவானால், மிகப்பெரிய குழப்பமும் போர்களும் மூளும். இப்படி ஒரு புதுவகையான ரியாலிட்டியை உருவாக்கும் செயலைச் செய்பவர்கள் Varientகள். இந்த வேரியண்ட்களை கைதுசெய்து, நேரக்கோட்டை சீராக இயங்கவைக்கும் அமைப்புதான் TVA.
Avengers Endgame படத்தில், ஒரு காட்சியில் Iron man, Captain America இன்னும் சிலருடன் 2012-க்கு டைம் டிராவல் செய்து லோகியிடம் இருக்கும் Tesseract-யை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய, அப்போது நடக்கும் குழப்பத்தில் லோகி Tesseract உடன் தப்பி TVA-விடம் சிக்குகிறார்.
ஏன் TVA லோகியை கைது செய்கிறார்கள்? லோகியின் இந்த செயலால், ஏற்கனவே நடந்த ஒரு ரியாலிட்டிக்கு மாற்றாக புது ரியாலிட்டி ஒன்று உருவாகிறது. இதனால், பல குழப்பங்கள் நேரலாம், அதை உணர்ந்தே TVA லோகியை கைது செய்கிறது.
TVA என்றால் என்ன, என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என லோகிக்குப் புரிவதற்குள் அவருக்கு தண்டனை உறுதியாகிறது. TVA ஏஜெண்ட்களில் ஒருவரான Mobius-க்கு லோகியின் முக்கியத்துவம் புரிகிறது. லோகியின் கேள்விகளுக்கு பதிலளித்து தெளியவைக்கும் போதே...
LOKI
LOKI
அதேதான்... லோகியின் திருவிளையாடல் ஆரம்பிக்கிறது.
சில உண்மைகளை லோகி புரிந்துகொள்கிறார். சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுற நாள் நரகமாயிடும்னு சுஜாதா எழுதுனதை லோகி புரிஞ்சுக்குறார். Mobius லோகியிடம் ஒரு உதவி கேட்கிறார். லோகி என்ன செய்யப்போகிறார் என்பது அடுத்தடுத்த எபிஸோட்களில் தெரியும்.
அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு... அவெஞ்சர்ஸ் படத்தின் பல காட்சிகள் திரையில் அடிக்கடி வந்துபோகும்... முக்கியமா தானோஸ் ரசிகர்களுக்கு இந்த எபிஸோடில் ஒரு சீன் இருக்கிறது. என்னடா அந்தப் பொருளை இப்படி பண்ணி வச்சிருக்கீங்க என கேட்கத் தோன்றும்...