மணிரத்னம் முதல் லோகேஷ் கனகராஜ் வரை... இவங்க படத்துல இந்த வாகனங்கள் கண்டிப்பா இருக்கும்!

By Marco Christiansen | Jun 21, 2021

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக இருப்பவர்கள் மணிரத்னம், கௌதம், வினோத், லோகேஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ். இவர்கள் படத்தில் இடம்பெறும் முக்கியமான வாகனங்கள் இங்கே...

மணிரத்னம் - ட்ரெயின் (லவ் சீன்ல கண்டிப்பா இருக்கும்)

கௌதம் வாசுதேவ் மேனன் - ராயல் என்ஃபீல்ட் பைக் (பைக்குக்குனே தனியா பாட்டு வைப்பாரு. இல்லைனா, இவர் வைக்குற பாட்டுல பைக் இருக்கும்)

ஹெச்.வினோத் - பஸ் (சண்டைக் காட்சிகள்ல பஸ் கண்டிப்பா வரும்)

கார்த்திக் சுப்புராஜ் - 80’ஸ் மாடல் கார் (பெரும்பாலும் இவரது ஹீரோக்கள் 80’ஸ் மாடல் கார்தான் வைச்சிருப்பாங்க)

லோகேஷ் கனகராஜ் - லாரி (லாரி இவரோட செண்டிமெண்ட் போல. அதுனாலயே கண்டிப்பா லாரியை படத்துல கொண்டு வந்துருவாரு)

இந்த காம்போவில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!