2022 -ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

1

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் நடித்திருந்த விக்ரம் படம் இந்த லிஸ்டில் முதலிடம் பிடித்திருக்கிறது.

2

பொன்னியின் செல்வன் 1

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்த மனிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.

3

பீஸ்ட்

விஜய்யின் பீஸ்டுக்கு மூன்றாவது இடம்

4

ராக்கெட்ரி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி மாதவன் நடித்து, இயக்கியிருந்த ராக்கெட்ரி படம் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

5

லவ் டுடே

2022-ன் கடைசி கட்டத்தில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பிடித்திருக்கிறது.

6

வலிமை

வலிமை அப்டேட் என்ற வார்த்தை கொஞ்ச காலமாகவே ஃபேமஸாக இருந்தது. அந்த அளவுக்கு டாக் ஆஃப் தி டவுனாக இருந்த அஜித்தின் வலிமைக்கு ஆறாவது இடம்.

7

திருச்சிற்றம்பலம்

2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் வரிசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் 7-வது இடம் பிடித்திருக்கிறது.

8

மகான்

கார்த்திக் சுப்புராஜ் - விக்ரம் கூட்டணியில் வெளியான மகான் படம் 8-வது இடம் பிடித்திருக்கிறது.

9

கோப்ரா

ஒன்பதாவது இடத்தில் இருப்பதும் விக்ரம் படம்தான். 

10

விருமன்

இந்த லிஸ்டில் பத்தாவது இடம் கார்த்தியின் விருமன் படத்துக்குக் கிடைத்திருக்கிறது.