ஹீரோவாக மட்டுமில்ல... என்னால் வில்லத்தனமும் செய்ய முடியும் என சில படங்களில் அஜித் வில்லன் கேரக்டரிலும் மிரட்டியிருப்பார். அப்படியான படங்கள் பத்திதான் பார்க்கப்போறோம்.
வாலி
தேவா - ஷிவா என இரட்டை வேடங்களில் அஜித் நடித்த இந்தப் படத்தில், வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத வேடத்தில் பார்வையிலேயே வில்லத்தனம் செய்திருப்பார் அஜித்.
அமர்க்களம்
வாலிக்குப் பிறகு ஆனந்தப்பூங்காற்றே படத்தில் வழக்கமான ஹீரோ ரோலில் நடித்திருந்த அவர், அமர்க்களம் படத்தில் வாசுவாக மீண்டும் ஒரு கிரே கேரக்டரில் நடித்து மிரட்டினார்.