`டெஸ்ட் பிளேயர்’ தோனி!

இலங்கைக்கு எதிரா பெங்களூர்ல நடந்த டெஸ்ட்ல அறிமுக வீரரா 2005 டிசம்பர் 2-ம் தேதி தொடங்குன மேட்சுல களமிறங்குன தோனி, கிட்டத்தட்ட 9 வருஷம் கழிச்சு மெல்போர்ன்ல 2014 டிசம்பர் 26-ம் தேதி தொடங்குன மேட்சோட ஓய்வை அறிவிச்சார்.

ஆஸ்திரேலியா சீரிஸ் நடந்துட்டு இருந்தபோதே அவர், ரிட்டையர்மெண்டை அவர் செலக்ட் பண்ண கோலி இந்திய டெஸ்ட் டீமோட கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகள்ல விளையாடியிருக்க தோனி, அதுல 60 போட்டிகள்ல இந்திய அணிக்குத் தலைமை தாங்கியிருக்காரு. அதுல 27 வெற்றி, 18 தோல்வி, 15 போட்டிகள் டிரா.

அவர் தலைமையில இந்தியா டெஸ்ட்ல நம்பர் ஒன் டீமா உயர்ந்துச்சு. ஆனாலும், வெளிநாடுகள்ல அதிகமான வெற்றிகள் பெறலைனு ஒரு விமர்சனம் அவர் கேப்டன்சி மேல இருக்கு. இதுதான் டெஸ்ட் மேட்ச்ல கேப்டன் தோனியோட ரெக்கார்டு.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

முதல் 90 டெஸ்ட்கள்ல அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர்கள்னு பார்த்தா, கில்கிறிஸ்ட் 5,353 எடுத்திருக்காரு. ரெண்டாவது இடத்துல 4,876 ரன்களோட இருக்க தோனிதான் இருக்காரு. வெளிநாடுகள்ல நடக்குற போட்டிகள்ல அதிகமுறை 50+ ஸ்கோர் அடிச்ச பிளேயர்ஸ் லிஸ்ட்ல முதல் இடத்தை ஆலன் நாட்டோட (19 முறை) தோனி பகிர்ந்திருக்கிறார்.

2,800 - 4,800 ரன்கள்ங்குற மைல்ஸ்டோனை எட்டிய முதல் இந்தியன் விக்கெட் கீப்பர், 3,200 - 4,800 ரன்கள் மார்க்கைத் தாண்டுன முதல் ஆசிய விக்கெட் கீப்பர் தோனிதான். பேட்டிங் ஆவரேஸ் வைஸ் பார்த்தா, ஆசிய அளவுல 2-வது இடத்துலயும், மொத்தத்துல 4-வது இடத்துலயும் இருக்காரு தோனி.

SENA நாடுகள்னு சொல்லப்படுற தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 1,500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும் மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஒரே சீரிஸில் 300 ரன்களுக்கும் மேல் குவித்த ஒரே ஆசிய விக்கெட் கீப்பர்ங்குற சாதனையும் இவர்கிட்டதான் இருக்கு. இதுதவிர, தோனி டெஸ்ட் விளையாடிட்டு இருந்த சமயத்துல மூன்று முறை ஐசிசி-யோட கனவு டெஸ்ட் டீமில் விக்கெட் கீப்பரா செலெக்ட் பண்ணப்பட்டார்.

Non-Losing Cause-னு சொல்லப்படுற டீம் தோல்வியடையாத போட்டிகள்னு பார்த்தீங்கனா தோனி 66 மேட்சுகளில் விளையாடியிருக்கார். இதுல அவரோட ரன்கள் 3,624. பேட்டிங் ஆவரேஜூம் 44-க்கு மேல. இந்தப் போட்டிகள்ல 29 முறை 50+ ஸ்கோர்ஸ் அடிச்சிருக்காரு.