125 ஆண்டுகள்... 9 லட்சம் புத்தகங்கள் கன்னிமாரா நூலகம் பற்றிய 6 தகவல்கள்!
124 ஆண்டுகளைக் கடந்து 125-ம் ஆண்டில் கம்பீரமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது, கன்னிமாரா நூலகம்.
“
1890-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1896-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திறக்கப்பட்டது.
“
நூலகத்துக்கு அடிக்கல் நாட்டும் போது மெட்ராஸ் மாகாண ஆளுநராக இருந்தவரும் நூலகம் அமைக்கும் திட்டத்தை ஆதரித்து ஊக்குவித்தவருமான கன்னிமாராவின் பெயர் இந்நூலகத்துக்குச் சூட்டப்பட்டது.
“
மெட்ராஸ் அருங்காட்சியக வளாகத்தினுள் அமைந்துள்ள நூலகத்தின் பழைய கட்டிடம் 'இந்தோ-சராசனிக்' கட்டடக் கலை அடிப்படையில் கட்டப்பட்டது.
“
தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து கற்கள் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கொண்டு வரப்பட்டன.
“
புத்தக அலமாரிகள், விலையுயர்ந்த தேக்குமரங்களில் இருந்தும் தயாரிக்கப்பட்டன. தோராயமான செலவு கணக்கு 5,75,000 ரூபாய். அன்றைய மதிப்பில் அது பெருந்தொகை.
“
இந்நூலகம் இந்தியாவின் நான்கு National Depository Libraries-களில் ஒன்று. அதாவது இந்தியாவில் வெளியாகும் அத்தனை புத்தகங்கள், இதழ்கள், செய்தித்தாள்களும் இங்கு சேகரித்து வைக்கப்படும்.
“
1948-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொது நூலகச் சட்டத்தின்படி 1950-ம் ஆண்டு மாநிலத்தின் மைய நூலகமாக ஆக்கப்பட்டது.
“
சமீபத்திய கணக்கெடுப்பின் படி கன்னிமாரா நூலகத்தில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.