கட்டாயம் படிக்க வேண்டிய அருந்ததி ராயின் புத்தகங்கள்
#HBDarundhatiroy
புனைவிலக்கியத்தில் புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராய், இந்திய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் கேள்விகளை எழுப்பிய பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய அவரின் சில புத்தகங்கள் இங்கே
புக்கர் பரிசு பெற்ற, அருந்ததி ராயின் முதல் நாவல் The God Of Small Things
பல வருட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதிய இரண்டாவது நாவல் The Ministry of Utmost Happiness
அம்பேத்கர் எழுதிய Annihilation of caste புத்தகத்தின் முன்னுரையாக எழுதிய பதிப்பு The Doctor and the Saint
நக்சல்பாரி தோழர்களுடன் பயனித்து அந்த அனுபவங்களை பதிவு செய்த புத்தகம் Walking with the Comrades
இந்திய ஜனநாயக பின்னணியில் முதலாளித்துவம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு Capitalism: A Ghost Story
வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியையும் மக்களின் பாதிப்புகளையும் பேசும் கட்டுரைத் தொகுப்பு Broken Republic
கடந்த ஆண்டு வெளியான கட்டுரைத்தொகுப்பு Azadi: Freedom. Fascism. Fiction. பாசிசம், சகிப்புத்தன்மை குறித்த கட்டுரைத் தொகுப்பு
அருந்ததி ராய் எழுதிய ஒட்டுமொத்த கட்டுரைகளின் தொகுப்பு My Seditious Heart