நடிப்பில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நாசரின் மறக்க முடியாத  பெஸ்ட் ரோல்கள் பத்திதான் பார்க்கப் போறோம்.

தேவர் மகன்

கமல்ஹாசன் - சிவாஜி கணேசன் காம்போவோடு மாயத்தேவர் கேரக்டரில் போட்டிபோட்டு நடித்த தேவர் மகன் படம், இவரின் கரியரில் முக்கியமான படம்.

மகளிர் மட்டும் 

சபல மேனேஜர் பாண்டியனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.

பம்பாய் 

நாராயணன் பிள்ளை என்கிற கண்டிப்பான அப்பா கேரக்டரில் நடித்திருப்பார்.

அவதாரம் 

சூதுவாது அறியாத குப்புசாமி கேரக்டர், சந்தர்பசூழ்நிலையால் கொலையாளியாக மாறும் கதைக்களம். இந்த கேரக்டரில் நாசரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மின்சாரக் கனவு

இந்தப் படத்தில் கண் தெரியாத கலைஞன் குருவாக நடிப்பில் அப்ளாஸ் அள்ளியிருப்பார்.

எம் மகன்

மளிகைக் கடை நடத்தும் கண்டிப்பான அப்பா திருமலை கேரக்டரும் நாசரின் கரியரில் முக்கியமான கேரக்டராக பதிவாகிவிட்டது. 

அவ்வை ஷண்முகி 

நாசரின் காமெடி முகம் பாஷா கேரக்டர் மூலம் வெளிப்பட்டது.

அன்பே சிவம்

தனது மகளைக் காதலிக்கும் கம்யூனிஸ சித்தாந்தம் கொண்டவரை எதிர்க்கும் முதலாளி நாசரின் வில்லத்தனம் இந்தப் படத்தில் வேறு மாதிரி இடம்பெற்றிருக்கும்.

ஜீன்ஸ்

அப்பாவி மற்றும் விவரமான அமெரிக்க வாழ் ரெஸ்டாரெண்ட் ஓனர் என இரட்டை வேடங்களில் இந்தப் படத்தில் நாசர் செய்திருந்தது வேற லெவல் கேரக்டர்கள்.