உறவுகளின் உன்னதம் பேசிய நா.முத்துக்குமாரின் 15 வரிகள்!

நடைபாதை கடையில்... உன் பெயர் படித்தால்... நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்...

வளையாமல் நதிகள் இல்லை.. வலிக்காமல் வாழ்க்கை இல்லை.. வரும் காலம்... காயம் ஆற்றும்...

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்... உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்... உதிர்ந்து போன மலரின் மௌனமா?

காதல் இல்லை.. இது காமம் இல்லை... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை...

கதை பேசிக்கொண்டே... வா... காற்றோடு போவோம்... உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்...

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி... உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்...

பாதை முடிந்த பிறகும்.. இந்த உலகில் பயணம் முடிவதில்லையே... காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்... இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே...