`நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...’ - சீமானின் ஃபேமஸ் பஞ்ச்கள்!
“”
வீட்டுக்கு ஒரு மிக்ஸி தர்றேன். கிரைண்டர் தர்றேன். அப்டிலாம் சொல்ல மாட்டேன். வேணும்னா, வீட்டுக்கு ஒரு கார் தர்றேன். ஓட்டப்போட்டு ஜெயிக்க வச்சிருங்க. எப்படி கார் தருவேன் பாருங்க. ஒரு போட்டோவ எடுத்துட்டு வருவேன். திறந்து காட்டுவேன். அண்ணல் அம்பேத்கர் படம் இருக்கும். இவர்தான் இந்தியாவிலேயே பெரிய கார். வச்சிக்கோங்கனு சொல்லுவேன்.
“”
நமக்கு எதிரி இருக்கக்கூடாது. இருந்தான்னா அவன் எதிர்க்கக்கூடாது. எதிர்த்துட்டான்னா அவனுக்கு எதிர்காலமே இருக்கக்கூடாது.
“”
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம். என்குடிகளுக்கு பனம்பால், தென்னம்பால், மூலிகைச்சாறுதான். அருகம்புல் சாறு குடிச்சா அவ்வளவு நல்லது. இத்துனூண்டு சின்னபுல் அது. ரொம்ப பெரிய புல்லு பனம்புல்லு. எந்த மதுவைக் குடிச்சாலும் மட்டையாகிதான் விழுவான். கள்ளக் குடிச்சவன் ரெண்டு செம்பு குடிச்சிட்டு போதும்ன்றுவான்.
“”
சாப்பாட்டுக்குதான் கூட்டு, பொரியல் எல்லாம். சண்டையில தனிச்சுதான். 4,3 சீட்டை வைச்சு ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு இந்த நாடு தேவைப்படுது. கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதுகொண்டு வருகிற பெருமைமிக்க வாழ்வு, வீடற்ற குடிகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவது, பயணிக்க சரியான பாதை, தடையற்ற மின்சாரம் என எல்லாத்தையும் மாற்றுவோம்.
“”
சரி, ஓகே, ரைட்டு.. சரி, ஓகே, ரைட்டு... அப்டினு பேசுவாங்க. ஒண்ணு சரினு சொல்லு, இல்ல ஓகே சொல்லு, இல்ல ரைட்டு சொல்லு. எதுக்கு மூணையும் சொல்ற. `ஆக்சுவலி’ இல்லைனா அடுத்த வார்த்த வராது. `சோ’ சொன்னாதான் சோறு இறங்கும். பட் சொல்லு.. இல்லை ஆனால் சொல்லு... பட் ஆனால், பட் ஆனால் சொல்லி சொல்லி மொழி பட்டு போச்சு.
“”
மேடையிலேயே சொல்றனே... மாட்டுக்கறி திண்பேன். மாட்டுக்காக பேசுகிறார். போராடுகிறார். அப்புறம் மாட்டுக்கறி திண்பேன் என்கிறார். நான் போராடுறதே மாட்டுக்கறி திங்கதான்.
“”
ஐயோ... பைத்தியக்கார பயலுககிட்ட வந்து மாட்டிட்டு படுறபாடு. ரொம்பத் திட்டவும் முடியல. ஒரு அளவுக்கு மேல போனா வேற எதாவது வார்த்தையை பேசி விட்ருவோமோனு வேற பயமா இருக்கு.
“”
சீமான் ஒரு தீவிரவாதி. ஏன்? சத்தமா பேசுகிறார். சத்தமா பேசுறதெல்லாம் தீவிரவாதமாடா? நான் இவ்வளவு சத்தமா பேசியும் சனியன் உன் காதுல விழலயேடா!
“”
சீமான், நீங்க முதலமைச்சர் ஆகுற ஆசைலதான் கட்சி ஆரம்பிச்சிங்களாமே. அப்புறம் என்னடா, முச்சந்தில நின்னு கத்திட்டு சாகுறதுக்காடா கட்சி ஆரம்பிச்சேன்.
“”
ஒரு ஐந்து வருடம் மட்டும் என்னிடம் ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள். புல்டோசர் மூலம் ஒரே இரவில் தமிழகத்தின் சுங்கச்சாவடிகளை அகற்றிவிடுவேன்.
“”
வாய்ப்பில்ல ராஜா!
“”
எது அநாகரீகம்? அவருடைய அனுமதி இல்லை.அவருக்கு தெரியாமல்அவர் படுக்கை அறை, கழிவறைகளில் எல்லாம் கருவி வைச்சு போய் வீடியோ எடுத்துட்டு வர்றது என்பதுதான் சமூக குற்றம். முதல்ல அவரைக் கைது பண்ணி நடவடிக்கை எடுத்துருக்கணும். உலகத்துல எங்கயுமே நடக்காத ஒன்றையா அவர் செஞ்சுட்டார்னு காட்டிகிட்டு இருக்கீங்க?
“”
நல்லாருப்பான் பையன். குடிக்க மாட்டான், சிகரெட் புடிக்க மாட்டான், படிப்பான், ஒழுக்கமா இருப்பான். அவன் தெருத்தெருவா அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துவான். சீண்டாது. திடீர்னு ஒருத்தன கட்டிட்டு வந்து நிக்கும். அவன் குடிகாரப்பய, பொறுக்கியப்ப, ஐயோக்கிய பயலா இருப்பான். அது தலையெழுத்து, நான் ஒண்ணும் பண்ண முடியாது.
எடப்பாடி பழனிசாமி முதல் சீமான் வரை… 5 வருடங்களில் எவ்வளவு சொத்து அதிகரித்துள்ளது?