நகங்களை எப்படிலாம் அழகாக்கலாம்.. சின்ன சின்ன டிப்ஸ்!

பியூட்டி பார்லர் போகமலே வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து விரல் நகங்களை எப்படி அழகா பராமரிக்கலாம்னு பார்க்கலாம். மிஸ் பண்ணாம நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யலாம்

ஆரஞ்சு பழச்சாற்றில் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நகங்கள் அழகாக மாறும்

பயோட்டின் நிறைந்த வாழைப்பழம், வெண்ணெய் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது

தினமும் உணவில் கீரை சேர்த்து வர நகங்கள் வலுவாகும்

முட்டை ஓடுகளை பேஸ்ட்டாக செய்து நகங்களில் தடவி வந்தால், நகங்கள் நன்றாக வளரும்

ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், நகங்களில் ஏற்படும் புஞ்சை தொற்றில் இருந்து தப்பிக்கலாம்

ரோஸ் வாட்டரை காட்டன் பஞ்சில் நனைத்து தடவிக்கொண்டால், நகங்கள் மினுமினுக்கும்

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து 10 நிமிடம் நகங்களில் ஊற வைத்தால், நகங்களில் உள்ள கறைகள் நீங்கும்

தூங்கும் முன்பு பெட்ரோலியம் ஜெல்லி தடவி பராமரிக்கலாம்

வொயிட் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நகம் பளபளப்பாகும்