கீர்த்தி முதல் மகிமா வரை... நயன்தாராவின் 10 கேரக்டர்களும் `நச்’ வசனங்களும்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக... இல்லை, இல்லை... லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் தாறுமாறு ஹிட். அந்த வகையில், ஹிட்டான திரைப்படங்களில் நயன்தாரா பேசி ரசிகர்களைக் கவர்ந்த சில வசனங்கள் இங்கே!

பத்து பேர் முன்னாடி எவ்வளோ தைரியமா பேசுறோம்ன்றதுதான் முக்கியமே தவிர...  எந்த Languageல பேசுறோம்ன்றது முக்கியம் இல்லை.  (கீர்த்தி - யாரடி நீ மோகினி)

Passion-ன்றது ஆம்பளைங்களுக்கு மட்டும்தானா... பொம்பளைங்களுக்கு இருக்கக்கூடாதா? (ஏஞ்சல் - பிகில்)

என்ன வேணும்னாலும் பண்றதுக்கு எங்களுக்கும் ஃப்ரீடம் இருக்குங்க. ஆனால், நாங்க அப்படி பண்ண மாட்டோம். ஏன்னா, அந்த ஃப்ரீடமோட இம்பார்டன்ஸ் எங்களுக்குத் தெரியும். அதோட லிமிட்டும் எங்களுக்குத் தெரியும். (மிருனாளினி - வேலைக்காரன்)

உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது. (ரெஜினா - ராஜா ராணி)

உயரத்துல எப்பவுமே தனியாதான் இருக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் தனியா இருக்குறதுனாலதான், நான் உயரத்துலயே இருக்கேன்.  (நிரஞ்சனா - விஸ்வாசம்)

அவ அபாஷன் பண்ண வந்தாளோ... அரை குறையா டிரெஸ் பண்ணிட்டு வந்தாளோ... இல்லை அவுத்துப் போட்டு வந்தாளோ... அவ நல்லவளோ... கெட்டவளோ... உனக்கு * வந்துச்சு. என்ன பண்ணாலும் அது அவளோட வாழ்க்கை. - (துர்கா - நெற்றிக்கண்)

டெமாக்ரஸியை மக்களுக்கு கத்துக்கொடுக்காதது கவர்மெண்டோட தப்பு இல்லையா? அரசாங்கம்னா, நான் மக்கள்னு நினைக்கிறேன். நீங்க அரசாங்கம்னு எதை சொல்றீங்க? -  (மதிவதனி - அறம்)

என்னை யாராச்சும் பெரிய ரௌடிகிட்ட கூட்டிட்டு போக முடியுமா? யாராச்சும் அப்படியே பயங்கரமா, வெயிட்டா, தைரியமா ஒரு ரௌடிகிட்ட கூட்டிட்டு போங்களே ப்ளீஸ். - (காதம்பரி - நானும் ரௌடி தான்)

என்ன நினைச்சிட்டு இருக்க. எல்லாரும் பக்தில சாமி கும்பிட வராங்கனா? பயத்துல கும்பிடுறாங்க. ஐயயோ தப்பு பண்றோமே அப்டிங்குற பயத்தைவிட, தப்பு வெளியில தெரிஞ்சு மாட்டிக்கக்கூடாதுன்ற பயம்தான் ஜாஸ்தி. பக்தி நம்பிக்கைல இருந்து பயமா மாறி ரொம்ப நாள் ஆச்சு.  (மூக்குத்தி அம்மன்)

நீ லவ்வ சொல்லதான் ஆசையா கூப்டேன்னு நினைச்சேன். டேய், ஏன்டா இப்படி பண்ற. ஒவ்வொரு தடவையும் ஆசைக்காட்டி ஆசைக்காட்டி என்னை ஏமாத்துறியேடா. இதுக்கு ஒரேயடியா என்னை சாவடிச்சுடலாம்ல. (மகிமா - தனி ஒருவன்)

உங்கள் சகிப்புத்தன்மை ஸ்கோர் என்ன… சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?