ஓடிடியில் உலக அளவில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டில் வெளியாக இருக்கும் 15 படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

Flames

AK 62

அஜித் - விக்னேஷ் சிவன் முதன்முறையாகக் கைகோர்க்கும் படம். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியிருக்கிறது. 

ஆர்யான்

பிரவீன்  கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் - வாணி போஜன் நடிக்கும் படம் இது.

சந்திரமுகி 2

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக பி.வாசு இயக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இறைவன்

ஐ.அஹமத் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இறுகப்பற்று

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, ஸ்ரத்த ஸ்ரீநாத், விதார்த் நடிக்கும் படம்.

ஜப்பான்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜிகர்தண்டா 2

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா என மிரட்டல் கூட்டணியில் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்

மாமன்னன்

அமைச்சர் உதயநிதி, நடிகராகத் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ள படம். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் நடித்திருக்கிறார்.

லைகா புரடக்‌ஷன் நம்பர் 18

யோகி பாபு, விதார்த் நடிக்கும் இந்தப் படத்தை டி.அருள்செழியன் இயக்குகிறார்.

லைகா புரடக்‌ஷன் நம்பர் 20

ரோஹின் வெங்கடேஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள்.

லைகா புரடக்‌ஷன் நம்பர் 24

பாரதிராஜா - அருள்நிதி லீட் ரோலில் நடிக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தை ஹரிபாபு இயக்குகிறார்.

ரிவால்வர் ரீட்டா

கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தை கே.சந்துரு இயக்குகிறார்.

தலைக்கூத்தல்

சமுத்திரக்கனி - கதிர் முதன்முறையாகக் கைகோர்க்கும் இந்த ஃபேமிலி டிராமா ஜானர் மூவியை இயக்குவது ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

தங்கலான்

பா.இரஞ்சித் - விக்ரம் இணைந்திருக்கும் படம் தங்கலான்.

வாத்தி

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் தனுஷ் கைகோர்த்திருக்கும் படம்