'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - 9 சுவாரஸ்ய தகவல்கள்

நடிப்புக்கென தனி இலக்கணம் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த 9 சுவாரஸ்ய தகவல்கள்

'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்த கணேசனுக்கு பெரியார், `சிவாஜி’ என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்.

கட்டபொம்மன் தொடங்கி வ.உ.சி, கொடிகாத்த குமரன் என பல வேடங்களில் நடித்து அவர்களை ரசிகர்கள் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி.

300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், 2 இந்திப் படங்கள், ஒரு மலையாளப் படம், 2 கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். 

1955ம் ஆண்டு வரை திராவிட இயக்கங்களில் பயணித்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 1982-ல் அக்கட்சியின் மேலவை உறுப்பினரானார். 

காங்கிரஸில் இருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். திரையுலகில் கிடைத்த வரவேற்பு, அரசியலில் கிட்டவில்லை.

பத்மஸ்ரீ (1966), பத்ம பூஷன் (1984), செவாலியே விருது (1995), தாதா சாகேப் பால்கே விருது (1996) உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர்.

சிவாஜி, 1962-ல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, நயகாரா நகரின் ஒருநாள் மேயராக அறிவித்து கௌரவப்படுத்தினர்.

1996-ம் ஆண்டு பிரதாப் போத்தனின் `ஒரு யாத்ரா மொழி’ மலையாள படத்தில் சிவாஜி நடித்தார். அவர் நடித்த ஒரே மலையாளப் படம் இதுதான்.