மருத்துவம் முதல் பொருளாதாரம் வரை... இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் ஆகிய இருவர்தான், இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றிருப்பவர்கள். வெப்பம், குளிர் மற்றும் இயந்திர சக்தி நம் உடலின் நரம்பு மண்டலத்தில் எவ்வாறு உணர்ச்சித் தூண்டலை ஏற்படுத்துகிறது என்பதே இவர்களின் ஆய்வு.

 ஜப்பானைச் சேர்ந்த சியுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் ஆகியவற்றிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகிய இரண்டு பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ``Asymmetric Organocatalysis” என்ற புதிய வினையூக்கியைக் கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காலனியாதிக்கத்தின் விளைவுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் அகதிகள் குறித்த படைப்புகளுக்காக தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுத்த முயற்சிக்காக பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பொருளாதாரத்திற்காக  கனடாவைச் சேர்ந்த டேவிட் கார்ட் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசுவா ஆங்கிரிஸ்ட், டச் - அமெரிக்கரான கைடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை ஏன் அவசியம்… கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?