ஆன்லைனில் ஆஃபர் டே சேல்ஸின்போது செய்யக்கூடாத தவறுகள்!

மைண்ட் செட் ரொம்பவே முக்கியம்… என்ன தேவை என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டு அதை மட்டும் வாங்குவது சிறந்தது.

போலியான பொருட்களைத் தவிர்க்க கவனமாக செயல்படுங்கள். ஆஃபரில் நிறைய ஃபேக் ப்ராடக்டுகள் விற்கப்பட வாய்ப்புகள் உண்டு.

பொருளை விற்பவர் குறித்த தகவல்கள், அதற்கான ரிவ்யூக்கள் எப்படியிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கொண்டு வாங்குவது நல்லது.

ஆஃபரில் கிடைக்கும் பொருட்களை மற்ற ஆன்லைன் தளங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குங்கள். அதன் பழைய விலை விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

ஆஃபர் பொருளின் உண்மையான பிராண்ட் சைட்டில் அதன் விலையை சரி பார்க்கவும்.

பிராண்ட் பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. மாடல் வெளியான வருடம், விலை கம்பேரிசன் பண்ணிப் பாருங்கள்.

புது ரிலீஸ் பொருட்களுக்கு 10% ஆஃபர் இருக்கும். அதுவே, பழைய ஸ்டாக்குகளுக்கு 80% வரை ஆஃபர் இருக்கும். அவை சீக்கிரமே தரம் இழக்கும்.

இ.எம்.ஐ ரொம்ப முக்கியம். 0% இ.எம்.ஐ என்றாலும் சில வங்கிகள் ப்ராசஸிங் கட்டணம் விதிப்பார்கள்.

அனைத்து கிரெடிட் கார்டு இ.எம்.ஐ டிரான்ஸாக்ஷன்களுக்கும் ஜிஎஸ்டி உண்டு. கேஷ் பேக் ஆஃபர் பார்த்து வாங்கவும்.