`அன்பு என்பது பாராட்டுதல். உடைமை கொள்ளுதல் கிடையாது!’ - ஓஷோவின் பொன்மொழிகள்

“”

மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. மரணத்துக்கு முன் உண்மையில் நாம்  வாழ்கிறோமா என்பதே கேள்வி.

“”

நிபந்தனையின்றி உன்னையே கொடுப்பதுதான் உண்மையான அன்பு.

“”

உன்னைத் தவிர யாராலும் உன்னை அழிக்க முடியாது. உன்னைத் தவிர யாராலும் உன்னை காப்பாற்றவும் முடியாது. நீதான் இயேசு. நீதான் யூதாஸ்.

“”

அகங்காரம் உங்களுடைய எதிரி. உங்களுடைய நண்பன் இல்லை. அகங்காரம்தான் உங்களை காயப்படுத்தும்.  அகங்காரம்தான் உங்களை கோபப்படுத்துகிறது. பொறாமைப்பட செய்கிறது. போட்டியிட செய்கிறது. வன்முறையாக்குகிறது.  அகங்காரம்தான் பிறருடன் உங்களை தொடர்ந்து பொருத்தி பார்க்கச் செய்து துயருறச் செய்கிறது.

“”

வேலையை வெறுத்து செய்பவன் அடிமை, வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.

“”

எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். விட்டுச் செல்லும் தன்மையை பிறருக்கு கொடுங்கள். கடவுள் ஒரு நாளில்  லட்சக்கணக்கான பூக்களை கட்டாயப்படுத்தாமல்தான் மலரச் செய்கிறார்.

“”

இந்தக் கணம்தான் உண்மை. மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும்தான்.

“”

நட்சத்திரங்களைக் காண இருள் தேவைப்படுகிறது.

“”

நாளை என்ற ஒன்று கிடையாது, இன்றே நிஜம்.

“”

உங்களுக்கு ஒரு மலர் பிடித்தால் அதை பறிக்காதீர்கள். நீங்கள் பறித்தால் அது இறந்துவிடும். பிறகு அதை நீங்கள் ரசிக்க  முடியாது. எனவே ஒரு மலர் பிடித்தால், அதை அதுவாகவே இருக்க விடுங்கள். அன்பு என்பது பாராட்டுதல். உடைமை கொள்ளுதல் கிடையாது.