‘எனக்கு எது தேவையோ அதான் அழகு’ - அயலி சீரீஸின் 10 ‘நச்’ வசனங்கள்!

அயலி வெப் சீரீஸ் பத்திதான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. இன்னும் பல வருஷத்துக்கு இந்த சீரீஸ் நின்னு பேசும். அந்த சீரீஸில் இடம்பெற்ற 10 தரமான வசனங்கள் இங்கே..

நாம எல்லாம் கோவிலுக்கு உள்ள போயிட்டா அவனுக சாமிய வெளிய தூக்கி எறிஞ்சிடுவானுக.

1

"

ஊரு கவுரவத்தை என்ன மயித்துக்குயா எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?

2

"

பண்பாட்டை காப்பாத்துறேன், கலாச்சாரத்தை காப்பாத்துறேன்னு வர்ற சல்லிப்பயலுக பின்னாடி நிக்காம இருந்தாலே போதும்.

3

"

ஊரவிட்டு ஓடிப்போன பொண்ண கொன்னுட்டு அவளயே தெய்வமாக்கி கோவில் கட்டி வப்பானுக.

4

"

யார் என்ன சொன்னாலும், உன் அறிவுக்கு எது சரி எனப் படுகிறதோ அதைச் செய்.

5

"

கலாச்சாரம் கட்டுபாடுனு சாமி பேர சொல்லி அவன்தான் ஏமாத்துறான்னா நமக்கு எங்க போச்சு புத்தி.

6

"

நீங்க சொல்றதெல்லாம் வரலாறு இல்லை, கட்டுக்கதை.

7

"

வேலை வெட்டி இல்லாதவன் தான் அடுத்தவன் முதுக எட்டி எட்டி பார்ப்பான். முதுக்கு பின்னாடியே பார்த்துட்டு இருந்தா முன்னாடி போக முடியாது.

8

"

நீ என்ன பொறக்கும்போதே வேட்டி, சட்டையோடவா பொறந்த? அம்மணமாத்தான திரிஞ்ச. எல்லாம் நடுவுல வந்ததுதான? புடிச்சுதுனா அம்மணமா சுத்து. இல்லைனா எதையாவது கட்டிட்டு திரி.

9

"

எனக்கு எது தேவையோ அதான் அழகு.

10

"