புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல. அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம்.
“
புரட்சி என்பது ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் சர்வாதிகாரம்.
“
நான் இயற்கையும் அறிவியலும் இணைந்து இயங்கும் பொருளியல் சிந்தனையில் அடிப்படையில் வாழ்பவன்.
“
முதலாளித்துவம் எங்குமே இதுவரை வெற்றி பெறவில்லை. அது மென்மேலும் அழிவைத்தான் விளைவிக்கிறது. கால ஓட்டத்தில் அழிவு பேரழிவாகிறது.
“
நான் நீதி என்ற நிலைமாறாத ஒன்றுக்காகத்தான் போராடுகிறேன்.
“
மனிதன் எதையும் திட்டமிடுவதில்லை. காலமும் சூழலும்தான் தனக்கான மனிதனை தக்க சமயத்தில் முன்னிறுத்துகிறது.
“
என்னைக் குற்றவாளியாக்குங்கள் கவலையில்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்.
“
புரட்சிக்கான உண்மைத் தேவையை அறிந்து அனைவரும் இயங்கும் காலமிது. இங்கே, திருடர்களுக்கும், துரோகங்களுக்கும், குறுக்கீட்டாளர்களுக்கும் இடமில்லை.
“
வாழ்வுக்கான இந்தப் போராட்டத்தை நாம் நிச்சயம் வெல்வோம். வாழ்வென்றால் நம்முடையது மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சிறுவர்களது வாழ்க்கையையும் மீட்டெடுக்கும் போராட்டம் இது.
“
ஒரு நல்ல தடகள வீரன் அயற்சி அறியாதவன். துவண்டுபோவது அவனது அகராதியில் இல்லை. அவனுக்கு அறிந்ததெல்லாம் இலக்கும் வெற்றியுமே.