முயல் முதல் சங்குக்கறி வரை... சென்னையில் இந்த உணவுலாம் ட்ரை பண்ணியிருக்கீங்களா?!

1

சென்னையில் மட்டன் மூளைல இருந்து வால் வரைக்கும் கறி வைச்சு சாப்பிட்டுருப்பீங்க. அதேபோல சிக்கன்லையும் ஏகப்பட்ட வெரைட்டி சாப்பிட்டிருப்பீங்க. ஆனால், முயல், புறா, வாத்துனு வெரைட்டியா சாப்பிட்டிருக்கீங்களா? ஆமாங்க, நம்ம சென்னையில் முயல், வாத்து, புறா அப்டினு ஏகப்பட்ட உணவுகள் சுவையா கிடைக்கும். அப்படியான இடங்களைத் தான் இன்னைக்கு பார்க்கப் போறோம். 

முயல் பிரியாணி

(காலையில் 3 மணிக்கு போனீங்கனா காரப்பாக்கம், முத்தமிழ் நகர் மூணாவது தெருவில் முயல் பிரியாணி கிடைக்கும். மூணு மணிக்கு முயல் பிரியாணி. செமயா இருக்கும்ல)

வாத்துக்கறி

(மினார் ஹோட்டலில் வாத்துக்கறி,  முயல் கறி அப்டினு ஏகப்பட்ட வெரைட்டியான உணவுகள் ரொம்பவே ஃபேமஸ். இதுகூட கொஞ்சம் நெய்சோறு போட்டு சாப்பிட்டா. அடடே! வேற லெவல்ல இருக்கும்)

Veal இறைச்சி

 (எல்லாத்தையும் ஒரு பிடி பிடிக்கணும்னு ஆசைப்படுறவங்க தாஷமாக்கான், அலெக்சாண்டர் சாலையில் இருக்கும் கடைக்குப் போய் சாப்பிடலாம். சென்னையிலேயே பெஸ்ட் தவா கறி, கபாப் எல்லாம் கிடைக்கும். எஞ்சாய்!)

சங்குக்கறி

(சங்குக்கறி கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம். கண்டிப்பா உங்களுக்கு சங்குக்கறி சாப்பிடணும்னு ஆசை இருந்தா பட்டினப்பாக்கம் பக்கத்துல இருக்குற மீனவன் உணவகத்துக்குப் போய் சாப்பிடுங்க. டேஸ்ட் செமயா இருக்கும்)

புறா பெப்பர் ரோஸ்ட்

(மதுரை குமார் மெஸ்ல புறா பெப்பர் ரோஸ்ட் சாப்பிட்டிருக்கீங்களா? செமயா இருக்கும். சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுது. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க)

பன்றிக்கறி

(சென்னையில் எங்கடா பன்றிக்கறி கிடைக்கும்னு தேடி அலையுறவங்களா... நீங்க? அப்போ உங்களுக்கான கடைதான் J.M.Pork shop. வளசரவாக்கத்துல இருக்குற இந்த கடையில் பன்றிக்கறி மட்டும்தான் விற்பனை செய்றாங்க.)

ஊரும் உணவும் : விருதுநகரில் மிஸ் பண்ணக்கூடாத 10 உணவுகள்!