ஷங்கர் மகாதேவன் முதல் சரண் வரை... எஸ்.பி.பிக்குப் பிறகு ரஜினிக்கு எந்த குரல் பொருந்தும்?

ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு ரஜினியின் ஓப்பனிங் பாடல்களை வேறு எந்தெந்த பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்... ஒரு சின்ன அலசல்!

ஷங்கர் மகாதேவன்

விஜய், அஜித் தலைமுறையின் ஓப்பனிங் பாடல்களின் கிங் என ஷங்கர் மகாதேவனைக் குறிப்பிடலாம். பொதுவாகவே எஸ்.பி.பியைப் போலவே ஹீரோக்களின் மேனரிசங்களுக்கேற்ப பாடல்களைப் பாடுவதில் ஷங்கர் மகாதேவனும் ஜித்துதான்.

ரஜினியின் ‘பாபா’ படத்தின் அறிமுகப் பாடலான ‘டிப்பு டிப்பு’ பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் வெளிவந்த ‘காலா’ படத்தில்கூட ‘வாடி என் தங்க சில’பாடலிலும் ஷங்கர் மகாதேவனின் குரல் ரஜினிக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

மனோ

கிட்டத்தட்ட எஸ்.பி.பியின் சாயலையே தன் குரலில் கொண்டவர் மனோ. எஸ்.பி.பிக்கு சற்றும் குறைவில்லாத திறமைக்கும் சொந்தக்காரர்.  

‘பாண்டியனா கொக்கா கொக்கா’, ‘உழைப்பாளி இல்லாத நாடுதான்’, ‘மலையாளக் கரையோரம்’ போன்ற ஏராளமான ரஜினியின் அறிமுகப் பாடல்களைப் பாடியும் இருக்கிறார்.

கார்த்திக்

பாபா’ பட ஆல்பம் வந்தபோது ரஜினி ரசிகர்கள் சற்றே ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். காரணம் இளம் பாடகர் கார்த்திக்குக்கு ரஜினி பட பாடல்.. அதுவும் ஒரே படத்தில் இரண்டு மாஸ் பாடல்கள் என்றுதான்.

ஆர்.ரஹ்மான் ரஜினியின் அடுத்த தலைமுறை குரலாக கார்த்திக்கை நிறுவ அவர் எடுத்த முயற்சிதான் ‘சக்தி கொடு’, ‘மாயா..மாயா’ என்ற இரண்டு மாஸ் பாடல்களை அவரது குரலில் அமைத்தது.

அனந்து

சந்தோஷ் நாராயணின் ஆஸ்தான பாடகர் அனந்து. ஏற்கெனவே ‘புலி உறுமுது’ போன்ற சில பாடல்களை பாடியிருக்கும் அனந்து சந்தோஷ் நாராயணுடன் இணைந்ததற்குப் பிறகு வெளிச்சம் பெற்றார்.

‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு இவர் பாடிய ‘மாயநதி’ பாடல் அனைவரையும் கவர்ந்தது. இயல்பிலேயே இவரது குரலில் இருக்கும் அடர்த்தி ரஜினிக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பியின் ஒரே மகன். தனக்கென தனித்துவமான குரல் வளமும் பாடும் திறமையும் கொண்டிருந்தாலும், அச்சு அசல் தன் தந்தை எஸ்.பி.பியைப் போலவே பாடுவதிலும் வல்லவர் சரண்.

தன் தந்தையுடன் இணைந்து பாடிய ‘ஆடுகளம்’ பட ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ பாடலில் எது தந்தையின் குரல் எது மகனின் குரல் என எந்தக் கொம்பனாலும் உறுதியாக சொல்லிடமுடியாது.

அப்படிப்பட்டவரை எஸ்.பி.பிக்கு மாற்றாக ரஜினியின் படங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை.

Pegasus: தேசிய பாதுகாப்பு என்ற வாதத்தையே எப்போதும் பயன்படுத்த முடியாது… உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வதென்ன?