டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெற்றிருக்கிறார். லண்டனில் நடந்த லாவர் கப் தொடரோடு ஓய்வு பெற இருப்பதாகக் கடந்த வாரமே அறிவித்திருந்தார்.
ரோஜர் ஃபெடரருடைய கடைசி போட்டியாக, ரஃபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், கடைசி போட்டிக்குப் பின்னர் ஃபெடரர், நடால் உள்பட ரசிகர்கள் பலரும் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
1998 Swiss Open Gstaad மூலம் ATP தொடரில் அறிமுகமான ஃபெடரர், 2022 Laver Cup தொடரோடு ஓய்வுபெற்றிருக்கிறார்.
தனது கரியரில் மொத்தம் 103 தொடர்களில் சாம்பியன். அதில், 6 ATP பட்டங்கள், 71 களிமண் கோர்ட் டைட்டில்கள், 19 புல்தரை கோர்ட் டைட்டில்களை வென்றிருக்கிறார்.
இதுதவிர, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளி, இரட்டையர் பிரிவில் தங்கமும் வென்றிருக்கிறார். மேலும், டேவிஸ் கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, 231 வாரங்கள் தொடர்ந்து முதலிடம். ஆண்டு இறுதியில் 5 முறை முதலிடத்தில் இருந்திருக்கிறார்.
2004 விம்பிள்டன் தொடங்கி 2010 ஆஸ்திரேலிய ஓபன் வரையில் நடந்த 23 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் குறைந்தபட்சம் அரையிறுதி வரையில் தகுதிபெற்று புதிய சாதனை படைத்திருக்கிறார்.
2003 முதல் 2007 வரையில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் விம்பிள்டன், 2004 - 2008 வரையில் தொடர்ச்சியாக அமெரிக்க ஓபனில் சாம்பியன்.
கரியரில் மொத்தமாக 1,231 மேட்சுகளில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். 20 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களும் இதில் அடங்கும்.