பெண்கள் பணிபுரிய ஏற்ற டாப் 10 இந்திய நகரங்கள்.. நம்ம சென்னை கெத்துதான்!

பெண்கள் பணிபுரிய ஏற்ற நகரங்கள் அல்லது பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான இந்திய நகரங்கள் பட்டியலை அவதார் என்கிற பணியிடங்கள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு நகரத்தையும் சமூகம் சார்ந்த உள்ளடக்கம், பெண்களுக்கான தொழில்துறை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த நிறுவனம் மதிப்பீடு செய்திருக்கிறது. 

இந்தப் பட்டியலில் நம்ம சென்னை 78.14 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்திய நகரங்களில் பெண்கள் பணிபுரிய ஏற்ற/பாதுகாப்பான நகரம் என்கிற டேக்கைப் பெற்றிருக்கிறது.

1

இந்திய நகரங்களைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிவதும் சென்னையில்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே 68.41 என்கிற ஸ்கோரோடு இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 

2

கர்நாடகத் தலைநகர் பெங்களூர் நகரம், 64.48 என்கிற ஸ்கோரைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் Women @ Workforce (WOW) என்கிற திட்டத்தையும் கர்நாடக அரசு பெண்களுக்காக அறிமுகப்படுத்தியிருந்தது. 

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தான் 62.47 என்கிற ஸ்கோரோடு இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் நகரம். 

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பைக்கு ஐந்தாவது இடம்தான். அந்த நகரம் 61.11 என்கிற அளவில் ஸ்கோர் செய்திருக்கிறது. 

பட்டியலில் அடுத்து இருக்கும் நகரம் குஜராத் மாநிலம் அகமதாபாத். அதன் ஸ்கோர் 58.62.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் இந்த லிஸ்டில்  56.14 ஸ்கோர்  செய்து டாப் டென்னுக்குள் இடம்பெற்றிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா இந்த லிஸ்டில் 54.80 ஸ்கோர் செய்திருக்கிறது. தொழில்துறையைப் பொறுத்தவரை 77.60 என்கிற அளவில் டாப் ஸ்கோர் இந்த நகரத்துக்குத்தான்

57.10 என்கிற ஸ்கோரோடு அடுத்த இடம் நம்ம கோவைக்கு.. தொழில்துறையில் 57.15 என்கிற அளவில் ஸ்கோரைப் பெற்றிருக்கிறது

இந்த லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பதும் நம்ம தமிழக நகரம்தான். மதுரை 49.35 என்கிற ஸ்கோரோடு அடுத்த இடம் பிடித்திருக்கிறது.