`நமக்கு இருக்குற பிரச்னைல இந்த டவுட்லாம் தேவையா?!’ - சந்தானத்தின் 10 எவர்கிரீன் காமெடி ’பஞ்ச்’கள்

டேய் இந்த பச்சத்தண்ணி குடுச்சுட்டு பாயாசம் சாப்ட்ட பில்டம் கொடுக்குற வேலைலாம் என்கிட்ட வேணாம்.

நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? இல்லை... அவ்ளோ பெரிய அப்பாடக்கரானு கேக்குறேன்.

பரவால்ல நீங்க காண்டானீங்கள்ல அதுபோதும்.

நமக்கு இருக்குற பிரச்னைல இப்போ இந்த டவுட்லாம் தேவையாடா?!

மனசார சொல்றண்டா சத்தியமா நீயெல்லாம் உருப்பட மாட்ட... உருப்படவே மாட்ட!

லவ்வுன்றது ஆயா சுடுற வடை மாதிரி. அந்த வடையை எப்போ வேணாலும் காக்கா வந்து கவ்விட்டு போகும். ஆனால், ஃப்ரெண்ட்ஷிப்புன்றது அந்த ஆயா மாதிரி. அந்த ஆயாவை எவனாலயும் தூக்க முடியாது.

இப்படியே பண்ணிட்டு இருந்த மூளை சிதறி மூக்கு வழியா விழுந்துரும்.

அண்ணனோட கைப்பக்குவம். தூக்கத்துல எழுந்துகூட கைய நக்குவோம்.

ஊர்ல பத்து பதினைஞ்சு ஃப்ரெண்ட் வைச்சிருக்கன்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரேயொரு ஃப்ரெண்ட வைச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே.

கேக்குறவன் கேணைனா கேரம்போர்ட கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியே நீ.

சந்தானம் பேசியதில் உங்களோட ஃபேவரைட் டயலாக் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!