இது மக்களுக்கு இடையே கொஞ்சம் அதிருப்தி கொடுக்கிறது. கட்டணம் என்பது அன்றைய மக்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. கட்டணம் கட்ட முடியாதவர்கள் ஆறுகளில் நீர் எடுக்க சென்றனர். ஆற்றுவழிப்பாதை அமைக்கிறதா சொல்லி அங்க ராணுவம் நிறுத்தப்பட்டது. அடுத்ததா அந்த நிறுவனம் செய்த செயல் பகீர் ரகம். மக்களுடைய வீட்ல இருக்கிற கிணத்துல தண்ணீர் எடுத்தால்கூட வரி செலுத்த வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது
பெக்டலின் விலை ஏற்ற அறிவிப்புக்கும், கடுமையான நடவடிக்கைகளுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையெல்லாம் கேட்ட அரசாங்கம் மழுப்பலாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தது. பணம் கட்டும் வசதியில்லாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை சமாளிக்கவும், பெக்டலுக்கு ஆதரவாகவும் களத்தில் இறங்கியது, பொலிவியா அரசு. அதற்காக ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அரசின் திட்டத்துக்கு எத்ரிப்பு தெரிவித்த தலைவர்களும், மக்களும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.