சாவித்திரி முதல் சிநேகா வரை... ரீல் ஜோடியை ரியல் லைஃபில் கரம்பிடித்த நடிகைகள்!

தமிழ் சினிமாவில் ஆன் ஸ்கிரீனில் ஜோடியாக தோன்றி பின்னர் ஆஃப் ஸ்கிரீனிலும் ஜோடியாக மாறிய பிரபல நடிகைகள்!

சாவித்திரி - ஜெமினி கணேசன்

சாவித்திரியும் ஜெமினி கணேசனும் முதன்முறையாக 1948-ம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர். அதன்பிறகு காதலித்து  1952-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சாவித்திரி ஒருமுறை ரசிகருக்கு `சாவித்திரி கணேசன்’ என்று ஆட்டோகிராஃப் இட்டுள்ளார். அதன்பிறகே இவர்களின் திருமணம் வெளியே தெரிந்தது.

ஷாலினி - அஜித்

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்பும் ஆஃப் ஸ்கிரீன் ஜோடி பட்டியலில் ஹாலினி மற்றும் அஜித்துக்கு தனி இடம் உண்டு. 1999-ம் ஆண்டு அமர்க்களம் படத்துக்குப் பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜோதிகா - சூர்யா

`ஜோதிகா - சூர்யா’ மாதிரி செம ஜோடியா இருக்கீங்கனு இன்றைக்கும் மக்கள் தம்பதிகளைப் பார்த்து கூறுவதுண்டு. இருவரும் இணைந்து சுமார் 7 படங்கள் நடித்துள்ளனர். காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் இந்த ஜோடியின் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட். 2006-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது.

சினேகா - பிரசன்னா

`அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தின்போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஷாலினி - அஜித், ஜோதிகா - சூர்யா வரிசையில் ஸ்நேக - பிரசன்னா ஜோடிக்கும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சமந்தா -  நாக சைதன்யா

`ஆட்டோ நகர் சூர்யா திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

2ஜி விவகாரத்தில் மன்னிப்புக் கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்… பின்னணி என்ன?