ஹன்சிகா முதல் நிவேதா தாமஸ் வரை... கோலிவுட்டை கலக்கும் 5 ஹீரோயின்கள்!

சின்னத்திரையில் பிரபலமடைந்து இப்போது ஹீரோயின்களாகவே வெள்ளித்திரையில் வலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்களைப் பற்றி..

Hansika Motwani

90-களில் மிகப் பிரபலமாக இருந்த `ஷக்கலக்க பூம் பூம்’ எனும் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. தனது 15-வது வயதில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ‘தேசமுத்ரு’ எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார். 

Priya Bhavani Shankar

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி ஷங்கர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்பு, ‘மேயாத மான்’ படம் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கருக்கு அதன்பிறகு ஏறுமுகம்தான்.

Vani Bhojan

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், மாடலிங்கும் செய்து வந்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் பிரபலமானார். தமிழில் ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்த இவருக்கு தற்போது, ‘மகான்’ ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘கேசினோ’ போன்ற படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

Aishwarya Rajesh

சன் டிவியில் வந்த ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதைத்தொடர்ந்து, கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சிறப்பான நடனத் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதன்முறையாக 2010-ஆம் ஆண்டு ‘நீதானா அவன்’ என்ற மினிமம் பட்ஜெட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் வெளிச்சம் பெற்றார்.

Nivetha Thomas

தமிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ‘ராஜ ராஜேஸ்வரி’ ‘மை டியர் பூதம்’ போன்ற மாயாஜாலத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். வருக்கு தமிழில் முதல் வெள்ளித்திரை பிரவேசமாக விஜய்யின் ‘குருவி’ படம் அமைந்தது. அதைத்தொடர்ந்து `நவீன சரஸ்வதி சபதம்’, ‘ஜில்லா’, ‘பாபநாசம்’ போன்ற படங்களில் நடித்த நிவேதா தாமஸூக்கு ரஜினிக்கு மகளாக ‘தர்பார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.