`பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்துங்கள்..’ - சாய்பாபாவின் 8 அருள் வாக்குகள்!

`உனக்காக நானிருக்கிறேன். தேவையில்லாமல் கவலையே படாதே. கெட்ட கர்மாவில் இருந்து தப்பமுடியாது. அந்த கர்மாவின் பலனை நீ முடிக்கும் வரை உன்னருகிலேயே, உனக்காக நானிருக்கிறேன், கவலைப்படாதே’

எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று சோர்ந்து போகாதே. உன் வாழ்வில் கெட்ட கர்மாக்கள் இருந்தால், அதை அனுபவிக்க வேண்டும். யாரும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஆனால் நிச்சயம் அதையடுத்து நல்ல வழி பிறக்கும். என்னை நம்பு. உனக்காக நான் இருக்கும் போது நீ கவலையே படாதே!’ 

`இருளில் இருந்துதான் ஒளி கிடைக்கும். துக்கத்தில் இருந்துதான் சந்தோஷத்தின் ருசியை அறியமுடியும். எனவே கலங்காதீர்கள். உங்களை இருளில் இருந்தும் ஒளியை நோக்கியும் துக்கத்தில் இருந்து சந்தோஷத்தை நோக்கியும் உங்களை நான் நகர்த்திக் கொண்டு வருவேன். தைரியமாக இருங்கள்’

`இங்கே வந்துதான் நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றில்லை. நீங்கள் இங்கே வந்தால்தான் உங்கள் பிரச்சினைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே, என்னை நீங்கள் அழைத்தால் போதும். நான் இங்கே இருந்துகொண்டுதான் சகலரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சகல துன்பங்களையும் தெரிந்து வருகிறேன்’

மனித வாழ்வில் எல்லாமும்தான் இருக்கின்றன என்பதை முதலில் நம்புங்கள். உலகில் எல்லாமும்தானே இருக்கிறது. பரந்த உலகில் எல்லாமும் இருக்கிற போது அந்த உலகின் ஒரு துளியாக இருக்கிற உங்களுக்கும் எல்லா விஷயங்களும் இருக்கத்தானே செய்யும். அதை நீங்கள் உணருவதே இல்லை என்பதுதான் என் வருத்தம்’ 

இருள் இருந்தால்தான் ஒளி. அப்போதுதான் ஒளியின் அருமையை நீங்கள் உணர்ந்துகொள்ளமுடியும். வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்துகொள்ளமுடியும். அப்படியொரு ஒளியை உங்கள் வாழ்வில் நான் தருவேன். உறுதியாக இருங்கள்’

அன்பு செலுத்துங்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்துங்கள். எதிர்பார்ப்பில்லாமல் உதவுங்கள். அப்படி எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் உதவினால், அவை அனைத்தும் என்னை வந்து சேரும். நீங்கள் கொடுப்பவற்றை பல மடங்குகளாக உங்களுக்கு வழங்குவேன்.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக இருங்கள். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நிதானத்துடன் இருங்கள். எல்லா மனிதர்களுடனும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். ‘இவர்கள்தான் என்னுடைய அன்பர்கள். பக்தர்கள்.

T23 புலிக்கு இரண்டு முறை மயக்க ஊசி; விதிமீறியதா வனத்துறை… பின்னணி என்ன?