ரஹ்மானின் நம்பிக்கைக்கு தேசிய விருதை பரிசளித்த நரேஷ் ஐயர்!

ஒரு பாட்டுப்போட்டிக்கு ரஹ்மான் நடுவராக சென்றிருந்தபோது அந்தப் போட்டியில் நரேஷ் ஐயரைப் பார்த்திருக்கிறார். 23 வயதான அவரின் குரல் ரஹ்மானை ஈர்க்க, ஒரே சமயத்தில் மூன்று பாடலுக்கான வாய்ப்பைக் கொடுக்கிறார்.

அடுத்த வாய்ப்பு, அமீர்கான் நடித்த ரங் தே பசந்தி படத்தின் ராபாரோ பாடல் வாய்ப்பு. அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் படத்தின் முன்பே வா பாடல்.

இதில் ரங் தே பசந்தி பாடலுக்காக நரேஷ் ஐயருக்கு தேசிய விருது கிடைத்தது. தன் மீது நம்பிக்கை வைத்த ரஹ்மானுக்கு தேசிய விருதை நன்றியாக பரிசளித்தார் நரேஷ் ஐயர்.

மயிலிறகே, முன்பே வா, முன்தினம் பார்த்தேனே, கண் இரண்டில் மோதி, நான் சொன்னதும் மழை வந்துச்சா என தொடரந்து நரேஷின் பாடல்கள் ஹிட் என்றாலும், இவரால் கர்நாட்டிக் அல்லது கர்நாட்டிக் கலந்த மெலடி பாடல்கள் மட்டும்தான் வரும் என்கிற விமர்சனமும் இருந்தது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அதை உடைக்க வேண்டும் என கையப்புடி, ஏ சாலே என சில பாடல்களை தனது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியில் வந்து பாடியிருப்பார்.

ஆனால், தன்மீது வைத்த விமர்சனத்திற்கு பதிலடியாக வேணாம் மச்சான் வேணாம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ப்ரேயர் சாங் என இந்த இரண்டு பாடல்களிலும் வேற ஒரு நரேஷ் ஐயராக பாடியிருப்பார். இதற்குப் பிறகு எந்த ஸ்டைல் பாடலாக இருந்தாலும் நரேஷ் பாடுவார் என்கிற பேச்சு எழுந்தது.

நரேஷ் ஐயரை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜோடுதான் நரேஷ் அதிகமாக வேலை செய்திருக்கிறார். காதல் கொஞ்சம், முன் தினம் பார்த்தேனே, தீ இல்லை, வேணாம் மச்சான் வேணாம் என பல பாடல்கள் ஹாரிஸின் இசையில் நரேஷ் பாடியிருந்தாலும், ரஹ்மானுக்கு பாடிய பாடல்களில் ஹிட் லிஸ்ட் அதிகம் என்றே சொல்லலாம்.

மயிலிறகே, இன்னிசை, முன்பே வா, வலையப்படி தவிலே, கண்ணுக்குள் கண்ணை, அம்பிகாபதி, மெர்சல் அரசன் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேப்போல், ஸ்ரேயா கோஷலோடு நரேஷ் இணைந்து பாடிய முன்பே வா, ஒரு வெட்கம் வருதே, உன் பேரை சொல்லும்போதே போன்ற பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் ஹிட்ஸ்.

நரேஷ் ஐயர் பாடிய எந்தப் பாடல்கள் உங்களுடைய ப்ளேலிஸ்டில் இருக்கின்றன என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.