`ஆண்டவன்கிட்ட கேக்குற ஒரே ஒரு வரம்’ - சிவாஜி கணேசனின் 8 நச் டயலாக்குகள்!

“”

ஓடினாள் ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்! 

“”

என் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா, நீ என்ன மாமனா... மச்சானா!

“”

ஒரு பாட்டு பாடுடி, ராசாத்தி!

“”

பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா? கலையை வில்லிலே பூட்டுவது கலைமகனுக்கு வேடிக்கை காட்டவா? இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய் வெறி!

“”

யானைக்கும் அடிசறுக்குமா... யானை சறுக்கி கீழ விழுந்ததுனா எப்படி அடிபடும் தெரியுமோ, இல்லையா? அதால, எழுந்திருக்கவே முடியாது. அதைதானே எல்லாரும் எதிர்பார்க்குறா!

“”

என் தங்கைதான் என் உயிர். என் உலகமே அதுதான். அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன். அது அழுதா... ஐயையோ, என்னால தாங்கவே முடியாது. நான் கண்ணத் தொறந்துருக்கும்போதெல்லாம் அது என் முன்னாலயே நிக்கணும். கண்ண மூடி இருந்தேன்னா, என் கனவுலகூட கலகலனு சிரிச்சு விளையாடணும்.

“”

என்னமோ காலணா, அரையணா மாதிரி லட்சம் லட்சம்னு பேசிக்கிறாங்க. லட்சம் லட்சம்ங்கிறது சர்வ சாதாரணமா போச்சி போ. ம்ம்ம்... பத்து பைசா... நம்ம லட்சம்!

“”

நான் ஆண்டவன்கிட்ட ஒரே ஒரு வரம்தான் கேட்டுகிட்டு இருக்கேன். ஒரே ஒரு வரம். அதென்ன தெரியுமா? என்ன சுத்தி இருக்குற என் நண்பர்கள் எல்லாரும் நல்லா இருக்கணும். அதைப் பார்த்து நான் சந்தோஷப் படணும்.

Sivaji Ganesan: `நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் ஹீரோவான தருணம்!

Read More