கீரைகள் முதல் பழங்கள் வரை... வியக்க வைக்கும் வி.ஐ.பிக்களின் வீட்டுத்தோட்டம்!

தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில்  நிழல் வலைக்குடில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார், சிவகார்த்திகேயன்.

நடிகை சீதா தனது வீட்டு மாடியில் 1,500 சதுரடியில் பிரம்மாண்ட மாடித்தோட்டம் அமைத்து  காய்கறிகளை அறுவடை செய்து வருகிறார்.

மதுரையில் தனது வீட்டைச் சுற்றிலும் தென்னை, மா, மலர்கள் என வண்ணமயமான வீட்டுத்தோட்டம் அமைத்திருக்கிறார், மதுரை முத்து. 

நடிகை சுஹாசினி தனது வீட்டு மொட்டை மாடியில் ஹைட்ரோஃபோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் காய்கறிகள் மற்றும் கீரைகளை பயிரிட்டு அறுவடை செய்கிறார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

நடிகை குஷ்பு தனது வீட்டு மாடியில் பிரம்மாண்ட மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.

நடிகை காயத்ரி ஜெயராமன் சென்னையில் உள்ள வீட்டில் காய்கறி மற்றும் கீரைகளை பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார். 

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் ஹைறோபோனிக்ஸ் முறையில் வீட்டுத்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார். அவ்வப்போது அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதனை பகிர்ந்து வருகிறார்.  

 நடிகர் மாதவன் மும்பை மற்றும் சென்னையில் உள்ள வீட்டில் மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார். பழ வகைகளையே மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்து ஆச்சர்யமூட்டுகிறார்.

அனிதா குப்புசாமி தம்பதி சென்னையில் உள்ள தனது வீட்டில் மாடியில் விவசாயமே பார்த்து வருகின்றனர். சுமார் 400 செடிகளுக்கு மேல் பராமரித்து வருகிறார்கள்.

நடிகை ஶ்ரீரெட்டி தனது வீட்டு மாடியில் சுமார் 400 சதுர அடியில் எலுமிச்சை, நாவல், காய்கறிகள் உள்ளிட்டவற்றை பராமரித்து வருகிறார்.