காமகோடி பீடம்; கள்வன் பெருமாள், காஞ்சி காமாட்சி கோயிலின் தலபெருமை!

கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் 24 ஸ்தம்பங்கள் உள்ளது, இவை 24 அட்சரங்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு

துர்வாசர் எனும் தேவி பக்தர் ஒருவருக்கு  மட்டுமே அம்மன் முதன்முதலில் காட்சியளித்தார்

இங்கு இருக்கும் அம்மனுக்கு முன்னாள் உள்ளே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது, இதே தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்

யாரும் கண்டிராத வகையில், கருவறையில் மூல விக்ரத்துக்கு அருகே ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி இருக்கிறார்

இங்கே உள்ள அம்மனுக்கு மூன்று வடிவங்கள் உள்ளது, அதனை ஸ்துலாம், சூட்சுமம், காரணம் என்று அழைக்கின்றனர்

இக்கோவிலின் முக்கிய சிறப்பாக கள்வர் பெருமாள் சன்னிதி, காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் பக்கத்தில் இருப்பது

காமாட்சி அம்மனின் 51 சக்தி பீடங்களில் காஞ்சி கோயில் காமகோடி பீடமும் ஒன்று.

இந்த கோயிலில், காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி என 5 கமாட்சிகள் உள்ளனர்

இங்கு எழுந்தருளியிருக்கும் காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார்

காமாட்சி சன்னிதிக்கு அருகில் உள்ள துண்டீர மகராஜனை வணங்கச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும், இல்லையெனில் சாபத்திற்கு ஆளாக நேரிடும்