பிரதமர் மோடியின் ’ஏர் இந்தியா ஒன்’ - விவிஐபி போயிங் 777 விமானத்தில் என்ன ஸ்பெஷல்?

பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஏர் இந்தியா ஒன் விவிஐபி போயிங் 777 ரக விமானத்தின் உள்ள சிறப்பம்பசங்கள் என்னென்ன தெரியுமா?

விவிஐபி போயிங் 777 விமானத்தில் அவசரம் ஏற்பட்டால் நடு வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்ப முடியும். அதுமட்டுமல்ல இதில் பவர்ஃபுல்லான இரட்டை GE90-115 இன்ஜின்கள் இருப்பதால் மணிக்கு 559.33 கி.மீ வேகத்தில் செல்லும்.

போர் சமயங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோல, எதிரிகளின் ரேடார்களை குழப்பக்கூடிய Self-Protection Suits பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானம் இதுதான்.

ஏர் இந்தியா விமானத்தில் அசோகச்சின்னம் வரையப்பட்டுள்ளது. இதன் ஒருபுறம் பாரத் என்று இந்தியிலும் மறுபுறம் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

சுமார் 4,500 கோடி விலையுள்ள இந்த விமானத்தில் மோடி பயணிக்கும்போது மீட்டிங்கை நடத்துவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஏதுவாக பல உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா விமானத்தில் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நவீன அகச்சிவப்பு சமிக்ஞை ஏவுகணையை குழப்பக்கூடும்.

11,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த விமானத்தால் தொடர்ந்து பறக்க இயலும். அதாவது, அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வழியில் எங்கும் நிற்காமல் பயணம் செய்ய முடியும்.  43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.

கம்ஃபடபிளான இருக்கை வசதிகள், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு செல்பேசி வசதிகள், விமானத்தின் அனைத்து பகுதிகளிலும், வான் மற்றும் தரைவழி கேமிராக்கள் இணைக்கப்பட்ட இருக்கை வசதிகள் இதில் உள்ளன.

இந்தியாவிற்கு சொந்தமாக 2 போயிங் ரக விமானங்கள் உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.